வாசகர்கள் பேசுகிறார்கள்

1 2 3 17

வாசகர்கள் பேசுகிறார்கள்

(மார்ச்-ஏப்ரல் 2021)

[01]
அன்பார்ந்த ஆசிரியர் அவர்களுக்கு, தங்கள் கடிதங்களும் பத்திரிக்கைகளும் தவறாமல் கிடைக்கப்பெறுகிறோம். ஆண்டவரின் பெரிதான கிருபையால் 2020ஆம் ஆண்டின் வேதவாசிப்பின் அட்டவணைப்படி பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடிக்க கர்த்தர் கிருபை செய்தார்.

Mrs.Menaka George, Coimbatore.


[02]
நமது ஆண்டவரின் இரக்கம் நிறைந்த பராமரிப்போடு கடந்த 82 ஆண்டுகள் கர்த்தர் கரம்பிடித்து நடத்தி 2021க்குள் என்னை பிரவேசிக்கச் செய்துள்ளார் என்பதை கோடானகோடித் துதிகளோடு சாட்சி கூறி சமர்ப்பிக்கிறேன். கடந்த 50 ஆண்டுகட்கு முன்பிருந்தே இலங்கை வானொலியில் சத்திய வசன நிகழ்ச்சிகளைத் தவறாமல் கேட்டு மகிழ்ந்துள்ள நான் இன்று வரை தொடர்ந்து பங்காளராகவும் இருந்து வருகிறேன். 2020ஆம் ஆண்டிலும் மறுபடியும் ஒருமுறை தியான புத்தகத்திலுள்ள அட்டவணையைப் பயன்படுத்தி பரிசுத்த வேதாகமத்தைக் கிரமமாக வாசித்து முடிக்க அருள் செய்த ஆண்டவரைத் துதிக்கிறேன். நெருக்கடி நிறைந்த இக்கடைசி நாட்களில் சத்தியவசன ஊழியங்கள், ஊழியர்களை கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிக்கிறேன்.

Mrs.Chandrabai Paul, Coimbatore.


[03]
I thank Lord for your ministry through media and Bi-monthly maga zine and Anuthinamum Christhuvudan and they are very useful for our daily devotion. Thank you again and God bless your Lord’s ministry.

Dr.Deivamony Selvam, Trichy


[04]
இம்மட்டும் வழிநடத்தி பாதுகாத்து ஜீவன் தந்த கர்த்தருக்கே ஸ்தோத்திரம். முதிர்வயதிலும் உன்னைத் தாங்குவேன், தப்புவிப்பேன் என்று சொன்ன தேவன் எனது 82வது வயதைக் காணச்செய்தார். அவருக்கே கோடான கோடி நன்றி. அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்தை தினமும் வாசித்து தியானிப்பதின் மூலம் என் வாழ்வில் சமாதானம், ஆறுதல், மாற்றங்கள் உண்டாகச்செய்து ஆண்டவரை அதிகம் தேட, ஜெபிக்க துதிக்கச் செய்தார். வேதாகம வாசிப்பு அட்டவணைப் படி 2020ஆம் ஆண்டில் பரிசுத்த வேதாகமத்தை முழுவதுமாக வாசித்து முடிக்க கிருபை செய்தார். அவருக்கே நன்றி. ஒவ்வொரு மாதமும் தியானங்களை எழுதிவருகிற சகோதர, சகோதரிகளுக்காகவும், ஊழியத்தின் எல்லாத் தேவைகளும் சந்திக்கப்பட ஜெபிக்கிறேன்.

Mrs.Darlingam Gunaranjitham, Ramnad.


[05]
அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானப் புத்தகத்தில் பிரசுரமாகும் அட்டவணைப்படி 2020ஆம் ஆண்டில் பரிசுத்த வேதாகமத்தை முழுவதுமாக ஒருமுறை வாசித்து முடிக்க கிருபை செய்தற்காக ஆண்டவருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்.

Mr.P.Gurunath Rajasekeran, Chennai.

வாசகர்கள் பேசுகிறார்கள்

(ஜனவரி-பிப்ரவரி 2021)

[01]
மார்ச் -ஏப்ரல் 2020 மாத சத்தியவசன சஞ்சிகையை 3 முறை படித்தேன். ஒவ்வொரு தலைப்பிலான செய்திகளையும் படித்து ஆறுதலடைந்தேன். சகோதரி சந்திரா அருமைராஜ் அவர்கள் எழுதியிருந்த மீட்பர் இயேசு உயிர்த்தார் என்ற கவிதை மிகவும் அருமை. தங்களை தேவன் இன்னும் வல்லமையாய் எடுத்து பயன்படுத்த வேண்டுகிறேன்.

Mrs.Sundariammal, Madurai.


[02]
Dear Brother in Christ, I need your Monthly Daily reading book and Sathiya vasanam Magazine. Daily reading devotions are super and very useful.

Mrs.Daisy Jeyapandiaraj, Vellore.


[03]
தங்களது பத்திரிக்கை எனக்கு கிடைத்தது. வாசித்தேன். சத்தியவசன பத்திரிக்கை உண்மையிலேயே ஜீவனுள்ள தேவனண்டைக்கு என்னை வழி நடத்துகிறது.

Mrs.Mary Jebaraj, Madurai.


[04]
அன்புள்ள சத்தியவசன குடும்பத்துக்கு, என் அன்பின் வாழ்த்துக்கள். இவ்வாண்டில் கடினமான பேரழிவின் மத்தியிலும் நம்மை காத்து வழிநடத்தும் தேவனுக்கு நன்றி சொல்ல வார்த்தையில்லை. முதிர்வயதிலும் தாங்குவேன், சுமப்பேன் என்று வாக்குத் தந்த தேவன் என் வாழ்விலும் அப்படியே செய்துவருகிறார். நவம்பர் மாதம் 82 வயதை காண தேவன் கிருபை செய்தார். 91 ஆம் சங்கீதத்தில் சொல்லப்பட்ட வாக்குகள் யாவையும் நான் அனுபவித்து வருகிறேன். கர்த்தருக்கே மகிமை!

Mr.Richard Sam Alex, Chennai.


[05]
தாங்கள் அனுப்பும் பத்திரிக்கைகள் கிடைக்கின்றன. சத்தியவசன ஊழியங்களுக்காக, அனைத்து ஜெபக்குறிப்புகளுக்காக ஜெபிக்கிறேன். பத்திரிக்கைகள் ஆசீர்வாதமாக உள்ளன. வாசித்து பயன்பெறுகிறேன். கர்த்தர் ஊழியங்களை ஆசீர்வதிக்க ஜெபிக்கிறேன்.

Sis.Gunaselvi Malliga, Udumalpet.


[06]
தங்களின் இருமாத வெளியீடு அனுதினமும் கிறிஸ்துவுடன் என்ற ஏடு மறைக் கல்வி நடத்தவும், பெண்கள் பணிக்குழு, குறிப்பாக அன்பின் ஐக்கியக் கூடுதல் போன்ற நிகழ்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சத்தியவசனம் என்ற ஏடு வாலிப இயக்கம், பேரவை மூப்பர்கள் மற்றும் இருபால் பெரியவர்களுக்கும் மிகச் சிறந்த வழிகாட்டியாகவும் கிறிஸ்துவை இன்னும் ஆழமாக அறிய தூண்டுதலாக இருக்கிறது.

Mr.S.Thangaraj, Chennai.


[07]
தாங்கள் எனக்கு அனுப்பிய நவம்பர் – டிசம்பர் அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழை கூடுமானால் மற்றொரு பிரதி அனுப்ப வேண்டுகிறேன். அதில் வெளியிடும் செய்திகள் நன்றாக மிகவும் பிரயோஜனமாக இருப்பதால் என் மகளுக்கு அனுப்பிவிட்டேன். கர்த்தர் ஊழியத்தை ஆசீர்வதிக்க ஜெபிக்கிறேன்.

Mr.A.David Jeyachandran, Madurai.

வாசகர்கள் பேசுகிறார்கள்

(நவம்பர் – டிசம்பர் 2020)

[01]
அனுதினமும் கிறிஸ்துவுடன் வாசிக்கும்பொழுது ஒவ்வொரு வார்த்தைகளும் என் ஆத்துமாவைப் புதுப்பித்து ஒவ்வொரு நாளும் ஆண்டவருக்குள் வளரச் செய்கிறது. மனநிறைவும் கிடைக்கிறது. இந்த ஊழியத்தில் பங்கு பெற்றுள்ள சகோதர, சகோதரிகளுக்காக ஜெபிக்கிறேன். ஆண்டவர்தாமே இந்த ஊழியத்தின் எல்லாத் தேவைகளையும் சந்தித்து தொடர்ந்து சிறப்பாக நடைபெற கிருபை செய்வாராக!

Mrs.Darling Gunaranjitham, Tuticorin.


[02]
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகம் சரியாக ஒவ்வொரு நாளும் வாசிக்கும்போது கர்த்தர் நடத்திகொண்டு போவதை உணரமுடிகிறது. தியான புத்தகம் சரியான நேரத்தில் கிடைப்பதற்கு உதவுங்கள். மிகுந்த ஆர்வத்துடன் காத்திருப்போம்.

Mr.Mani, Dindigul


[03]
சத்தியவசன ஸ்தாபனத்தின் மூலம் நடைபெறும் வல்லமையான ஊழியத்திற்காக ஆண்டவரைத் துதிக்கிறோம். தங்கள் ஊழியம் மேலும் வளர்ச்சி அடையவும் அநேக மக்கள் இயேசுவின் அன்பையும் ஒளியையும் கண்டுகொள்ளவும் ஜெபிக்கிறோம்.

Mr.D.Thangaraj, Kottaram, K.K.dt.


[04]
அன்பான சகோதரருக்கு, அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகத்தில் 21.8.2020-நாளின் தியானம் (வெளி.3:1-6) சர்தை சபையைப்பற்றி ஆவியானவர் வெளிப்படுத்தின செய்தி என்னை உற்சாகப்படுத்துகிறதாகவும் சவால் நிறைந்ததாகவும் இருந்தது. ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.

Mr.Asir Thomas, Kallidaikurichi.


[05]
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நான் வாட்ஸ் அப் – ஒரு குருப்பில் உள்ளேன். அந்த குரூப்-பில் உங்களது தியான செய்திகளும் வரும். அதிலுள்ள வேதவாசிப்பு எல்லாவற்றையுமே தவறாமல் பின்பற்றி வருகிறேன். இன்றைக்கு உள்ள தியான செய்தி (செப்டம்பர் 19) கண்களோடு உடன்படிக்கை யோபுவின் புத்தகத்திலிருந்து கொடுக்கப்பட்ட செய்தி ரொம்பவே பயனுள்ளதாக இருந்தது. தியானத்தின் இறுதியில் இடம்பெற்றுள்ள ஜெபமும் எனக்கு அதிக பிரயோஜனமாக உள்ளது. என்னுடைய அன்றாட வேத பகுதிகளோடு நான் இவற்றையும் சேர்த்து படிப்பது வேதத்தை ஆராய்ந்து படிக்க ஏதுவாயிருக்கிறது. இவ்விதமாக எங்களை ஆன்மீக வழியில் நடத்துகிற உங்கள் ஊழியங்களுக்காக ஜெபிக்கிறோம் .

Sis.Banumathi, Panakudi.

1 2 3 17
சத்தியவசனம்