இன்றைய ஜெபக்குறிப்பு

ஜெபக்குறிப்பு: 2018 பிப்ரவரி 26 திங்கள்

“பூமியின் எல்லைகளையெல்லாம் திட்டம் பண்ணி கோடைகாலத்தையும் மாரி காலத்தையும் உண்டாக்கின தேவன்” (சங்.74:17) தாமே இவ்வருடத்தின் கோடைகாலத்தை ஆசீர்வதித்திட, விவசாயத்தை மாத்திரமே நம்பியுள்ள விவசாயிகளின் பிரயாசங்கள் நல்ல பலனைத் தர இயற்கை சூழ்நிலைகளை கர்த்தர் ஆண்டு வழிநடத்த ஜெபிப்போம்.

ஜெபக்குறிப்பு: 2018 பிப்ரவரி 25 ஞாயிறு

தமக்கு விரோதமாய் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள் (எபி.12:3) என்ற வாக்குப்படி கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை பின்பற்றும் நாமும்  இந்த ஆராதனை நாளில்  அவரையே நமக்கு மாதிரியாக முன்வைத்து வாழ அர்ப்பணித்து ஜெபிப்போம்.

ஜெபக்குறிப்பு: 2018 பிப்ரவரி 24 சனி

சூரியனுள்ளமட்டும் அவருடைய நாமம் சந்தான பரம்பரையாய் நிலைக்கும் (சங்.72:17) இவ் வாக்குப்படியே வேதாகமத்திற்கு திரும்புக அனைத்து நாடுகளின் ஊழியங்களின் மூலமாக தேவனுடைய நாமம் அறிவிக்கப்பட்டு கொண்டேயிருக்க  ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.

சத்தியவசனம்