இன்றைய ஜெபக்குறிப்பு

ஜெபக்குறிப்பு: 2018 ஏப்ரல் 20 வெள்ளி

“சேனைகளின் தேவனே … உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்” (சங்.80:7) இவ்வாக்குப்படியே தொழில் செய்கிற 18 நபர்களது தொழிலில் ஏற்பட்ட நஷ்டங்களை நீக்கி, கைகளின் பிரயாசங்களில் வெளிச்சத்தையும் செழிப்பையும் தந்து அநேகருக்கு ஆசீர்வாதமாக தேவன் பயன்படுத்த  ஜெபிப்போம்.

ஜெபக்குறிப்பு: 2018 ஏப்ரல் 19 வியாழன்

“நான் பாடும்போது என் உதடுகளும், நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழும்” (சங்.71:23) சத்தியவசன பாடல் மற்றும் செய்தி சிடிக்களை தேவன் ஆசீர்வதிக்கவும், இவ்வூழியத்தை விஸ்தாரமாக்கவும் இப்பாடல்கள் செய்திகளை கேட்பவர்களின் இருதயங்களை இளைப்பாற்றி சந்தோஷத்தால் நிரப்பும்படியாக ஜெபம் செய்வோம்.

ஜெபக்குறிப்பு: 2018 ஏப்ரல் 18 புதன்

“நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்” (உபா28:6) என்ற வாக்குப்படியே சத்தியவசன ஊழியத்தின் பங்காளர்களாகவும் ஆதரவாளர்களாகவும் ஜெபத்தினால் தாங்கி வருகிற ஒவ்வொருவரையும் கர்த்தர் ஆசீர்வதித்து அவர்களை கனப்படுத்த வேண்டுதல் செய்வோம்.

சத்தியவசனம்