வாசகர்கள் பேசுகிறார்கள்

மார்ச்-ஏப்ரல் 2019

[1]
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரருக்கு, நாங்கள் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் மற்றும் Whatsapp – இல் வரும் வசனங்களினால் வாசித்து பயனடைந்து வருகிறோம். தங்கள் ஊழியம் மென்மேலும் சிறக்க ஜெபிக்கிறோம்.

Mrs.Kumari veni, Bangalore.


[2]
அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகத்தை சரியான நேரத்தில் பெற்றுக்கொண்டிருக்கிறோம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். என் வாழ்வுக்கு இத்தியானங்கள் மிகவும் நல்ல போதனையாயும் வழிகாட்டியாகவும் குறைகளை இடித்துரைக்கும் நல் மருந்தாகவும் உள்ளது. என் அனுதின வாழ்வில் ஏதேனும் குறைகள் ஏற்பட்டு அது என் மனதில் படாமலிருக்கும்போது இத்தியான பகுதிகள் சரியான வேளையில் அவைகளை உணர்த்திக் காண்பித்து என்னை திருத்திக்கொள்ள உதவுகிறது. கர்த்தர் இத்தியானங்கள் மூலம் வல்லமையாக செயல்படுகிறார்.

Mr.P.Samson Jawahar Pandian, Tirunelveli.


[3]
ஒவ்வொரு மாதமும் உங்கள் புத்தகம் தவறாமல் வருகிறது. எனக்கு வயது 88. கடவுள் கிருபையாலும் உங்கள் ஜெபத்தாலும் நன்றாக இருக்கிறோம். தியான புத்தகம் அதிக ஆசீர்வாதமாக இருக்கிறது. ஊழியங்கள் இன்னும் ஆசீர்வாதமாக நடைபெற அனுதின ஜெபத்தில் ஜெபிக்கிறோம்.

Mrs.Kamalam, Covai.


[4]
சத்தியவசனம் தொலைகாட்சி நிகழ்ச்சியை தவறாமல் பார்த்து வருகிறோம். பாடல்கள் வேதவசனங்கள் யாவும் எங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கிறது. உங்கள் ஊழியங்களுக்காகவும் தொலைகாட்சி நிகழ்ச்சிக்காகவும் ஊழியர்களுக்காகவும் தினம் ஜெபித்து வருகிறோம்.

Mr.Ravichandran, Vellore.


[5]
அன்பான சகோதரருக்கு, தினந்தோறும் தாங்கள் Whatsapp -இல் அனுப்பும் வசனங்கள் யாவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி. எங்களது ஜெபக்குறிப்புகளையும் அதில் தெரியப்படுத்திக் கொண்டே இருந்தேன். நீங்களும் ஜெபித்து பதில் அனுப்பியிருக்கிறீர்கள். எங்களுக்காக தொடர்ந்து ஜெபிக்கவும்.

Mr.V.Alphonse, Chennai.

சத்தியவசனம்