வாசகர்கள் பேசுகிறார்கள்

மே-ஜுன் 2019

[1]
சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளை நம்பிக்கை டிவியில் பார்த்தேன். திரு.எடிசன் அவர்கள் 2 தெசலோனிக்கேயர் நிருபம் பற்றி பேசினார்கள். அந்த நிருபம் யார் எழுதியது, அதன் நோக்கம் பற்றியும் தெசலோனிக்கேய சபையில் இருந்த கள்ள உபதேசங்கள், குழப்பமான சூழ்நிலை இவைப் பற்றி மிக தெளிவாகப் பேசினார்கள். மிக மிக பயனுள்ளதாக இருந்தது.

Mr.ஆபெத்நேகோ, ஈரோடு.


[2]
தங்களது அனுதினமும் கிறிஸ்துவுடன் பத்திரிக்கை காலை ஜெபத்திற்கு தேவையான வசனங்களையும், பெலத்தையும் கொடுக்கிறது. சத்தியவசனம் சஞ்சிகையில் ஒவ்வொருவர் கொடுக்கும் செய்திகள் மிகவும் பிரயோஜனமாக உள்ளது. சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதும் செய்திகள் ஆறுதலையும் அநேக காரியங்களுக்கான விளக்கத்தையும் தருகிறது. அவர்களது சுக நலனுக்காகவும் ஊழியங்களினாலே அநேக ஆத்துமாக்கள் ஆதாயப்படுத்தப்படுவதற்கும் ஜெபிக்கிறேன்.

Mrs.Susila, Pondicherry.


[3]
We are praising and thanking our Almighty God for enabling your Mission to carry out various Ministries to His Glory in our country. Praying our God will meet all your needs in this endeavour.

Mr.Dinakarpaul, Chennai.


[4]
தங்களது பத்திரிக்கை எங்களுக்கு தவறாமல் கிடைக்கிறது. அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சுமார் ஐந்து ஆண்டு காலமாக தங்களது புத்தகம் மூலம் பரிசுத்த வேதாகமத்தை முழுமையாக படித்துள்ளேன். இனிமேலும் தொடர்ந்து படிக்க வாஞ்சையாக உள்ளேன். தங்களது ஊழியம் மேன்மேலும் வளர அனுதின ஜெபத்தில் வேண்டிக்கொள்கிறேன்.

Mrs.Gnanajothi Selvaraj, Nallur.


[5]
நீங்கள் அனுப்பிவரும் ஆவிக்குரிய புத்தகங்கள் யாவும் எங்களுக்கு மிகுந்த பயனுள்ளதாகவும் ஆறுதலாகவும் உள்ளது. முக்கியமாக அனுதினமும் கிறிஸ்துவுடன் என்னும் இருமாத இதழ் எங்கள் குடும்ப ஜெபத்தில் வாசித்து மகிழ்கிறோம். மற்றொரு இதழ் சத்தியவசன சஞ்சிகையின் கட்டுரைகளும் ஆண்டவருடன் நெருங்கி வாழ பயனுடையதாக இருக்கிறது. எங்களது விண்ணப்பங்களுக்காக ஜெபித்த சத்தியவசன ஸ்தாபனத்தாருக்கும் ஜெபத்தைக் கேட்ட ஆண்டவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Mr.Goodwill Newton, Tiruvallur.


[6]
Greetings in the name of our God and Saviour Jesus christ, We are regularly receiving your Magazines. we do pray for your Ministry.

Mrs.Regi Christopher, Chennai.


[7]
Dear Brother in Christ, Your Tv Program was so beautifully presented. I wish a Million people had seen it and realised to Living power of our Lord Jesus. Bless Him.

Mrs.Usha Prasad, Bangalore.

சத்தியவசனம்