வாசகர்கள் பேசுகிறார்கள்

மார்ச்-ஏப்ரல் 2020

[1]
சத்திய வசனம் நிகழ்ச்சிகளை தவறாமல் பார்த்து வருகிறேன். அதில் ஒளிபரப்பாகும் வேத வசனங்களும் பாடல்களும் எங்கள் குடும்பத்திற்கு ஆசீர்வாதமாக சமாதானமும் கிருபை நிறைந்ததாக இருக்கிறது. தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

Mr.Ravichandran, Periyakuppam.


[2]
கடந்த ஆண்டு பைபிள் படிக்க முடியாதபடி பார்வை குறைபாடு இருந்தது. ஜூலையில் ஆபரேஷன் செய்தோம். பார்வை கிடைத்தது. 2019 ஆம் ஆண்டு அனுதினமும் கிறிஸ்துவுடன் அட்டவணைப்படி பரிசுத்த வேதாகமத்தை முழுவதும் வாசித்து முடிக்க தேவன் கிருபை செய்தார். ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.

Sis.Sarojini Arumairaj, Tiruvellore.


[3]
Greetings in the Name of the Lord Jesus Christ, I am regularly reading your Magazine and hearing your messages through Radio Sathiyavasanam and benefitted in my spiritual life. We are upholding you and your Ministry in our prayers.

Mrs.Sugnathi, Bangalore.


[4]
அன்பார்ந்த ஐயா, அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகத்தில் பிரசுரமாகிய அட்டவணைப்படி 2019 ஆம் ஆண்டு பரிசுத்த வேதாகமத்தை முழுவதுமாக வாசித்து முடித்துள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

Mrs.Annie Inbanayagam, Tuticorin.


[5]
கடந்த வருடம் முழுவதும் தாங்கள் அனுப்பிய அனைத்து பத்திரிக்கைகள், காலண்டர் யாவும் தவறாமல் கிடைக்கப்பெற்றோம். எங்களது குடும்பத்தினர் அனைவருக்காகவும் ஜெபித்து வருகிறீர்கள். தொடர்ந்து ஜெபியுங்கள்.

Mr.S.C.M.Pandian, Madhyapradesh.

சத்தியவசனம்