வாசகர்கள் பேசுகிறார்கள்

மே-ஆகஸ்ட் 2020

[1]
மார்ச்-ஏப்ரல் 2020ல் தாங்கள் அனுப்பித்தந்த சத்தியவசன புத்தகத்தில் தங்களையும் சேர்த்து 7பேர் எழுதியுள்ளார்கள். சுமார் 3 முறை படித்தேன். 1.சகோ.சாந்தி பொன்னு எழுதிய மனந்திரும்பு, ஆயத்தமாகு, என்ற தலைப்பில் அதிகபயங்கர செய்திகளையும், எச்சரிப்பின் கட்டளைகளையும் … எழுதியிருக்கிறார்கள். டாக்டர் ஐான் நுஃபெல்ட் என்பவர் இயேசு ஏன் மரித்தார்… என்பதை அழகாக எடுத்துக்காட்டியுள்ளார்.

Mrs.Sundari, Madurai.


[2]
கர்த்தருக்குள் பிரியமுள்ள சகோதரர் அவர்களுக்கு, தாங்கள் அனுப்பும் சத்தியவசன புத்த கங்கள் அனைத்தும் தவறாமல் பெற்று அதன்மூலம் மிகவும் பயனடைந்து வருகிறோம் மிக்க நன்றி.

Mrs.Anne Gunaseelan, Udhagamandalam.


[3]
இந்த இக்கட்டான காலகட்டத்தில் பாரத்தோடு ஊழியங்கள் செய்து கொண்டிருக்கிற உங்களுக் காக, உடன் ஊழியர்களுக்காக, குடும்பத்தினருக்காக, குழந்தைகளுக்காகவும் மற்றும் டில்லி, செகந்திராபாத், இலங்கையில் உள்ள ஊழியர்களுக்காகவும் கர்த்தரைத் துதிக்கிறேன். உங்கள் ஒவ்வொருவருக்காகவும் என் காலை ஜெபங்களில் ஜெபிக்க மறப்பதில்லை. கர்த்தரின் கரம் உங்கள் அனைவரோடும் இருந்து வழி நடத்துவதாக.

Mr.S.D.Isaac, Tuticorin.

சத்தியவசனம்