வாசகர்கள் பேசுகிறார்கள்

ஜனவரி-பிப்ரவரி 2021

[1]
அன்பான சகோதரருக்கு, வேத ஆய்வாளர் சகோ.எம்.எஸ்.வசந்தகுமார் அவர்களின் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை என்ற புத்தகம் மிகவும் தெளிவுடனும் தீர்க்கமான வேத வசன ஒப்பீடுகளுடனும் எவ்விதத்திலும் எந்த தவறும் சொல்லிமுடியாத அளவிற்கு மிகத் தீர்க்கமாக எழுதியுள்ளார். அவர் மேற்கோள் காட்டுகின்ற ஒவ்வொரு வேத ஆய்வாளர்களின் சான்றுகளும் மிகச் சிறப்பு. அவரின் வேத ஆய்வு பணி தொடர்ந்து வெற்றி பெறவும் மற்றும் அவரின் நற்செய்தி பணி சிறந்து விளங்கவும் ஜெபிக்கிறோம். தங்களது இருமாத இதழில் எழுதுகின்ற ஆசிரியர்கள் மற்றும் ஆவிக்குரிய புத்தகங்கள் எழுதுகின்ற ஆசிரியர்கள் யாவருக்கும் என் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். நற்செய்தி பணியில் தங்கள் இலக்கை நோக்கி தொடர்ந்து ஓடவும், ஆன்ம பலத்திலும் உடல் பலத்திலும் சிறக்கவும், ஜீவனுள்ள தேவனண்டைக்கு மக்களை வழிநடத்தும் பணி சிறக்கவும் ஜெபிக்கிறோம்.

Bro.S.Thangaraj, Chennai.


[2]
Praise the Lord Brother, Thank you very much for all your prayers regarding my daughter’s job and marriage. we are happy to inform that she is blessed with spiritual life partner …. Our God never fails. Our God has answered our prayers. She will be blessed with good job also soon. Nothing is impossible for our God. We as a family grateful to all Sathiyavasanam Faithpartners who prayed for my daughter and we praise God. Please pray that God’s name be glorified and Christ centred home may be built for them. Thank you once again for all your prayers.

Mrs.Punitha Ashok, New Delhi


[3]
ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் சத்தியவசனம் தொலைகாட்சி நிகழ்ச்சியைத் தவறாமல் பார்த்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுகிறோம். சத்தியவசனம் பத்திரிக்கையில் செய்தியை எழுதும் அனைவருக்காகவும் விசேஷமாக சகோதரி சாந்திபொன்னு அவர்களுக்காகவும் அனைத்து ஊழியங்களுக்காகவும் ஜெபிக்கிறோம்.

Mrs.Menaka George, Coimbatore.

சத்தியவசனம்