ஊழியத்தின் துவக்கம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி…..மத்.28:19 என்ற இயேசுகிறிஸ்துவின் வார்த்தைக்கு அமைய 1939ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி டாக்டர் தியோடர் எப். அவர்களால் அமெரிக்காவிலுள்ள லிங்கன் நகரில் "Back To The Bible" ஊழியமானது ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் பல நாடுகளிலும் கிளைகளாக பரவியது. ஆண்டவருடைய பெரிதான கிருபையால் இவ்வூழியமானது வளர்ந்து பெருகி தற்போது 14 நாடுகளில் விரிவடைந்துள்ளது. இந்தியாவில் நற்செய்தி ஒலிபரப்பு ஸ்தாபனம் (The Good News Broadcasting Society) என்ற பெயரிலே செகந்திராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவருகிறது. இவ்வூழியத்தின் தமிழ் பகுதி தான் சத்தியவசனம் வானொலி ஊழியமாகும். 1957ஆம் ஆண்டு இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட சத்தியவசனம் ஊழியம் இந்தியாவில் ஆரம்பத்தில் டெல்லியிலும் அதன் பின்னர் 1984ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் மதுரை பட்டணத்தில் செயல்பட்டு வருகிறது.

சத்தியவசனம்