ஜெபக்குறிப்பு: மே 14 சனி

சத்தியவசன வானொலி தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் சிறப்பு வேதபாடங்களை போதித்துவரும் செய்தியாளர்களை கர்த்தர் தொடர்ந்து வல்லமையாய் பயன்படுத்தவும், என் வார்த்தையை உன் வாயிலே அருளி… (ஏசா.51:16) என்ற வாக்கைப்போல கர்த்தருடைய ஆவியானவர் அவர்கள் மூலம் பேச மன்றாடுவோம்.

ஓடுவோமாக…

தியானம்: மே 14 சனி; வாசிப்பு: எபிரேயர் 11:33-40

…திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்க,
…இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில்
பொறுமையோடே ஓடக்கடவோம். (எபிரெயர் 12:1)

ஒரு பிரயாணத்தைத் தொடங்குமுன், நாம் எங்கே போகிறோம் என்ற ஒரு இலக்கு மிக அவசியம். அப்படி இல்லாவிட்டால் நாம் அலைந்து திரிய வேண்டியிருக்கும். அத்தோடு, சரியான இலக்கு இல்லாவிட்டால், சேரவேண்டிய இடத்தைப் போய்ச் சேரவேமாட்டோம். இது ஒருபுறமிருக்க, மறுபக்கத்தில், ஒரு பிரயாணத்தை நாம் இலக்குடன் தொடங்கும்போது எப்படியாவது அவ்விடத்தைச் சேரவேண்டும் என்ற வாஞ்சையும் நமக்கு அவசியம். அப்பொழுது அவ்வழியில் என்ன தடைகள் ஏற்பட்டாலும், பொறுமையோடு யாவற்றையும் சகித்துகொண்டு போகவேண்டிய இடத்தைப் போய்ச் சேர அது நம்மை உந்தித்தள்ளுமல்லவா!

எந்தவொரு மனிதனும் நூதனமான வாழ்வை வாழுவதில்லை. நமக்கு மட்டும்தான் கஷ்டம்; அல்லது நான் ஒருவன்தான் இக்கடின பாதையில் செல்லுகிறேன் என்று எவருமே சொல்லமுடியாது. நமக்கு முன் எத்தனையோ மக்கள் வாழ்ந்து, போராடி, ஜெயம் பெற்ற வாழ்வின் பாதையில்தான் நாமும் சென்று கொண்டிருக்கிறோம். அவர்களுடைய விசுவாச வாழ்வும், தேவனுடன் சேர்ந்து அவர்கள் பெற்ற வெற்றிகள் யாவும் நம்மை ஊக்குவித்துக்கொண்டே இருக்கின்றன. நாம் ஒருபோதும் தனியே போராடுவதில்லை; நாம் இன்று முகம்கொடுக்கும் பிரச்சனைகளோடு போராடுகின்ற முதல் மனிதன் நாம் அல்ல. நமக்கு முன்னே பொறுமையோடு ஓடி வெற்றி பெற்ற அநேக வேதாகம விசுவாச வீரர்கள் நமக்குச் சாட்சியாக இருக்கிறார்கள். அப்படியிருந்தும் அவர்கள் கிறிஸ்து அருளிய மீட்பைக் கண்டதில்லை. ஆனால் இன்று நாம் அந்த விசேஷித்த நன்மையைப் பெற்றிருக்கிறோம். இது நாம் பெற்ற பெரிய பாக்கியம் அல்லவா! அப்படியிருக்க, ஏன் நாம் இலக்குத் தெரியாமல் தடுமாற வேண்டும்? நமது ஒரே இலக்கு இயேசுகிறிஸ்துதான். நம்மைத் தடுக்கும் பாவத்தை எதிர்த்துப் போராடி அந்த இலக்கை அடையவேண்டும். நாம் தனித்து நிற்பவர்கள் அல்ல. நமது ஆண்டவர் நம்மோடு இருக்கிறார். நமது கண்கள் அவரை நோக்கி இருக்கவேண்டுமே தவிர மனிதர் மீது அல்ல. தேவன்மீதுள்ள நமது பார்வை விலகுவதால்தான் நமது இலக்குத் தவறி விழுந்துவிடுகிறோம்.

கர்த்தருக்குள் அருமையான பிள்ளையே, உன் வாழ்க்கை ஓட்டத்தின், இந்தப் பிரயாணத்தின் மெய்யான இலக்கு என்ன என்ற நிச்சயம் உனக்குண்டா? அதை அடையவேண்டும் என்ற வாஞ்சை உண்டா? அப்படியானால் அந்த இலக்கை அடையவிடாமல் உன்னைத் தடுக்கின்ற காரியங்கள் என்ன? தளர்ந்துபோகாதே. எதிர்த்துப் போராடி, கிறிஸ்துவை நோக்கியபடி தொடர்ந்து பொறுமையோடு ஓடு. உன் தேவன் உனக்குத் துணை நிற்பார்.

ஜெபம்: அன்பின் தேவனே, உம்மை நோக்கி ஓடும் என் ஓட்டத்தில் தடைகள் யாவற்றையும் மேற்கொண்டு, ஜெயம்பெற உதவிசெய்தருளும். ஆமென்.

அன்புடையீர் வணக்கம்!

சத்தியவசன இணைய தளத்திற்கு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துதல் கூறி உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இந்த இணையதளத்தின் வாயிலாக உங்களுக்கு சேவை செய்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். சத்தியவசன ஊழியமானது வெகுஜன தொடர்பு ஊழியமாகும் தமிழில் இந்த வெப்சைட்டில் இடம் பெற்றுள்ள எமது ஊழிய ஸ்தாபனத்தைப் பற்றிய தகவல்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் பிரயோஜனமாயிருக்கும் என நம்புகிறோம். மேலும் இதில் இடம் பெற்றுள்ள ஆவிக்குரிய செய்திகள் மற்றும் தியானங்கள் நீங்கள் ஆவிக்குரிய வாழ்வில் பெலமடையவும் ஆண்டவரோடு நெருங்கி ஜீவிக்கவும் உதவியாயிருக்கும். இதன் மூலம் தாங்கள் பெற்ற ஆசீர்வாதங்களையும் உங்கள் மேலான கருத்துக்களையும் எங்களுக்குத் தெரிவியுங்கள். உங்கள் ஜெபக்குறிப்புக்களையும் ஆவிக்குரிய தேவைகளையும் எங்களிடம் தெரிவிக்கலாம். உங்களுக்காக ஜெபிக்கவும் உங்களுக்கு ஆலோசனை அளிக்கவும் ஆயத்தமாயிருக்கிறோம். இந்த வெப்சைட்டிற்கு வருகைதரும் போது நீங்கள் எங்கள் நண்பர்களாகிறீர்கள். மேலும் நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினுடனான உறவிலே நீங்கள் மகிழ்ந்திருக்கவும் அதில் நிலைத்திருக்கவும் அதற்கு நாங்கள் உதவவும் விரும்புகிறோம்.

Welcome to the www.sathiyavasanam.in

It is a pleasure to serve you. We trust that the information and available material in Tamil language will be blessing to you, your family and friends. Sathiya Vasanam Ministry is a Unit of The Good News Broadcasting Society. It is a media ministry and we seek to touch lives with the blessing of God’s Word. You will find interesting information that will enrich you spiritual walk with the Lord Jesus and you can begin a closer walk with the Lord through the study of His Word. We welcome you to respond with any need or prayer request you may have. We are available to help you as best as we can and pray for you and your needs. When you log on to our website, you become our friend and we want to do all we can to make your relationship with Jesus Christ enjoyable and fulfilling. Thank you for choosing to log on to www.sathiyavasanam.in

சத்தியவசனம்