இன்றைய ஜெபக்குறிப்பு

ஜெபக்குறிப்பு: 2018 நவம்பர் 19 திங்கள்

வேதாகமத்திற்கு திரும்புக ஊழியத்திலிருந்து செய்யப்படும் ஹிந்தி, மராட்டி, பெங்காலி மொழி அனைத்து ஊழியங்களையும் கர்த்தர் ஆசீர்வதித்து, அம்மொழிகளைப் பேசக்கூடிய பெரும்பான்மையான மக்களுக்கு இவ்வூழியம் பயனுள்ளதாக இருக்க கிருபை செய்து தடையின்றி தொடர்ந்து ஊழியம் நடைபெற கர்த்தர் உதவி செய்திடவும் மன்றாடுவோம்.

ஜெபக்குறிப்பு: 2018 நவம்பர் 18 ஞாயிறு

கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள் .. தேவரீர் எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறீர் (1நாளா.29:11) வல்லமையுள்ள தேவன் அனைத்து திருச்சபைகளிலும் இவ்வருடத்தில் செய்யப்பட வேண்டிய திருச்சபை வளர்ச்சிப்பணிகளை நிறைவேற்றுவதற்கு உதவி செய்திடவும், மேலும் பல ஊழியத்திட்டங்களை உருவாக்குவதற்கும் ஜெபிப்போம்.

ஜெபக்குறிப்பு: 2018 நவம்பர் 17 சனி

குதிரை யுத்த நாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும் (நீதி.21:31) என்ற வாக்குப்படி படிப்பிற்காக ஜெபிக்கக்கேட்ட 9 பிள்ளைகள் நேரத்தை விரயப்படுத்தாமல் படிக்கவேண்டிய நேரங்களில் படிப்பதற்கும், தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய தேவன் அவர்களுக்கு உதவி செய்து எல்லாவற்றிலும் வெற்றி சிறக்கச் செய்வதற்கும் ஜெபிப்போம்.

சத்தியவசனம்