Monthly Archives: September 2018

வாசகர்கள் பேசுகிறார்கள்

(செப்டம்பர் – அக்டோபர் 2018)

[1]
அனுதினமும் கிறிஸ்துவுடன் படிப்பது மனதிற்கு மிக்க மகிழ்ச்சியையும் மன அமைதியையும் தருகிறது. ஒருவருடத்திற்குள் வேதத்தை வாசித்து முடிப்பதற்கு அட்டவணை அதிகமாக பயனுள்ளதாக உள்ளது. சத்தியவசன சஞ்சிகையில் வேதவினாக்களுக்கு விடைகள் எழுதுவதும் இலேசாக உள்ளது. மிக்க நன்றி.

Mrs.Sarojini Moses, Dohnanur.


[2]
அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகம் தவறாமல் கிடைக்கிறது. இவ்வருட காலண்டரும் கிடைத்தது. பரிசுத்த வேதாகமத்தில் ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் வரையிலும் தியான புத்தகத்தின் அட்டவணையைப் பயன்படுத்தி படித்து முடிக்கக் கர்த்தர் கிருபை செய்தார். தியான புத்தகத்தில் குறிப்பிட்டபடி வேதம் வாசிக்கவும், வேத போதனைகளின்படி நடக்கவும், கொடுக்கப்பட்டிருக்கும் ஜெபக்குறிப்புகளுக்காக அனுதினமும் எங்கள் குடும்ப ஜெபவேளைகளில் ஜெபிக்கவும் பிரயோஜனமுள்ளதாகவும் உற்சாகமூட்டுவதாகவும் இருக்கிறது. இவ்வூழியங்களுக்காக ஜெபிக்கிறோம்.

Mr.A.Chandra Bose, Maruthakulam.


[3]
அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகத்தை தினமும் படித்து வருவது மனதிற்கு மிகுந்த ஆறுதல், சமாதானம் அறிவுரையாக இருக்கிறது. கடந்த வருடத்திலும் பரிசுத்த வேதாகமத்தை முழுவதும் வாசித்து முடித்தேன் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். ஊழியங்கள் சிறப்பாக நடந்துவர தொடர்ந்து ஜெபிக்கிறேன்.

Mrs.Darling Gunaranjitham, Vellore.


[4]
அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகத்திலுள்ள தியானப் பகுதிகளை வாசித்து பரிசுத்த வேதாகமத்திலுள்ள சத்தியங்களை தெளிவாக அறிந்துகொள்ள தேவன் கிருபை செய்தார். அட்டவணைப்படி வேதத்தை ஒழுங்காக வாசித்து முடிப்பதற்கு கர்த்தர் கிருபை செய்து வருகிறதற்காகவும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

Mrs.Gnanamani Pauldurai, Vellalanvilai.


[5]
நான் சில ஆண்டுகளாக அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்தை படித்து வருகிறேன். அதிலுள்ள அட்டவணைப்படி வேதத்தை முறையாகக் கற்று வருகிறேன். கடந்த வருடத்திலும் முழுவதுமாக வாசித்து முடித்துள்ளேன் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

Mr.M.Duraisamy, Perundurai.


[6]
Dear Brother in Christ, Your Daily devotion Anuthinamum Christhuvudan is very useful for my Bible reading. Please do remember me in your prayers. May our Lord Jesus Christ bless your Ministry and all your endeavours.

Mrs.Joy Devapiryam, Sivakasi.


[7]
Greetings in the name of our Lord Jesus Christ, Thank you for sending your Magazines/News letters regularly. we are benefitted spiritually. God bless you more to build His Kingdom. we pray for you.

Mr.R.I.Jayarajan, Mysore.

ஆசிரியரிடமிருந்து…

(செப்டம்பர் – அக்டோபர் 2018)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

திரியேக தேவனாம் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

இவ்விதழின் வாயிலாக தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். இவ்வாண்டின் இந்நாள் வரையிலும் அறிவுக்கெட்டாத பெரிய காரியங்களை நமக்குச் செய்து நடத்தி வந்த எல்லா பாதைகளுக்காகவும் ஆண்டவரை ஸ்தோத்திரிப்போம்.

நமது தேசத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ள நிலைவரமற்ற சூழ்நிலைகளுக்காகவும் 2019ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்காகவும் தேசத்தின் நன்மைக்காகவும் ஆண்டவருடைய சமுகத்தில் மன்றாடுவோம். ஒழுக்கச் சீர்கேடுகள் நீங்க, நல்லாட்சி அமைய சுவிசேஷத்திற்கு அனுகூலமான ஆட்சி ஏற்படுத்தப்பட ஜெபிப்போம். நம்முடைய தேசத்தில் விவசாயம் அதிகம் நடைபெறக்கூடிய எல்லா இடங்களிலும் கர்த்தர் நல்ல மழையைக் கட்டளையிட்டு. வறட்சி நீங்கி செழிப்புண்டாவதற்கும், அதிகபட்ச மழையினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்காகவும் வேண்டுதல் செய்வோம்.

சத்தியவசன வானொலி, தொலைகாட்சி மற்றும் இலக்கியங்கள் வாயிலாக தாங்கள் பெற்றுக்கொண்ட ஆவிக்குரிய நன்மைகளை எங்களுக்குத் தெரிவியுங்கள். இது அநேகருடைய விசுவாசத்தைப் பெலப்படுத்துகிறதற்கு ஏதுவாயிருக்கும். தங்கள் நண்பர்கள் விசுவாசிகளுக்கு இவ்வூழியங்களை அறிமுகப்படுத்துங்கள். விசுவாசப் பங்காளர் காணிக்கையைப் புதுப்பிக்காத பங்காளர்கள் இவ்வருடத்தில் சந்தாவைப் புதுப்பிக்க நினைவூட்டுகிறோம். சத்தியவசன வானொலி தொலைகாட்சி நிகழ்ச்சிகளுக்கு ஆதரவாளர் திட்டத்திலும் இணைந்து தாங்க அன்பாய் அழைக்கிறோம்.

இவ்விதழின் செப்டம்பர் மாதத்தில் நமது கிறிஸ்தவாழ்க்கையில் நமக்கு நேரிடும் பாடுகள், சோதனைகள், பயங்களில் நமது விசுவாசம் காணப்பட வேண்டிய அவசியத்தை சகோதரி ஜெபி பீடில் அவர்கள் தியானங்களாக எழுதியுள்ளார்கள். அக்டோபர் மாதத்தில் கிறிஸ்து இயேசுவையே முழுவதும் சார்ந்து வாழ்கிற வாழ்வை பல்வேறு தலைப்புகளிலே சகோ. தர்மகுலசிங்கம் அவர்கள் தியானித்து எழுதியுள்ளார்கள்.

தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காக ஜெபியுங்கள். இத்தியானங்கள் உங்களுக்கு ஆசீர்வாதமாய் இருப்பதாக!

கே.ப.ஆபிரகாம்

சத்தியவசனம்