ஆசிரியரிடமிருந்து… (நவம்பர் – டிசம்பர் 2023)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இவ்விதழ் வாயிலாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் மூலமாக அநேகர் பிரயோஜனமடைந்து வருகிறதை அறிந்து தேவனைத் துதிக்கிறோம். நீங்கள் பெற்ற ஆசீர்வாத அனுபவங்களை எங்களுக்குத் தெரியப்படுத்த அன்பாய் கேட்கிறோம். இத்தியானங்களை தங்கள் உறவினர்கள், விசுவாச நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். அவர்களது முகவரிகளை எங்களுக்குத் தெரியப்படுத்தினால் மாதிரிபிரதிகளை அவர்களுக்கு அனுப்பித் தருகிறோம்.

சத்தியவசன ஊழியத்தை இணைக்கரம் கொடுத்து தாங்கிவரும் பங்காளர்கள் அனைவருக்காகவும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். பங்காளர்கள் அனுப்பும் அன்புகாணிக்கையினாலே தேவன் இவ்வூழியத்தின் தேவைகள் அனைத்தையும் சந்தித்து வருகிறார். இதுவரை விசுவாச பங்காளர் சந்தாவைப் புதுப்பிக்காதவர்கள் தயவுகூர்ந்து புதுப்பித்து தொடர்ந்து ஆதரிக்க அன்பாய் வேண்டுகிறோம். நீண்ட நாட்களாக சந்தாவைப் புதுப்பிக்காதவர்களுக்கு பத்திரிக்கை நிறுத்தப்படும் என்பதை வருத்தத்துடன் தெரியப்படுத்துகிறோம்.

இத்தியான புத்தகத்தில் ஜனவரி முதல் வெளியாகிவரும் வேதவாசிப்பு அட்ட வணைப்படி பரிசுத்த வேதாகமத்தை தவறாது வாசித்துமுடிக்கிறவர்கள் வழக்கம் போல் பெயர்களை எங்களுக்கு எழுதித் தெரிவியுங்கள். சகோ.சுசி பிரபாகரதாஸ் அவர்கள் வழங்கிய இயேசுகிறிஸ்து அருளிய உவமைகள் என்ற தலைப்பிலான புத்தகத்தைப் பங்காளர்களுக்கு அனுப்பிவைக்கிறோம். உங்கள் ஜெபவிண்ணப்பங்களையும் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். உங்களுக்காக பாரத்தோடு ஜெபிப்போம்.

இவ்விதழில் நவம்பர் மாதத்தில் சகோ.தர்மகுலசிங்கம் அவர்கள் எழுதியுள்ள தியானங்களும், டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் மாதத்தில் நாம் சிந்தித்து தியானிக்கவேண்டிய தியானங்களாக சகோதரி சாந்தி பொன்னு அவர்களும் எழுதியுள்ளார்கள். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளை உங்கள் ஜெபங்களில் தாங்க அன்பாய் கேட்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்