வாசகர்கள் பேசுகிறார்கள்

நவம்பர்-டிசம்பர் 2014

1. மே – ஜுன் சத்தியவசன சஞ்சிகையில் வெளிவந்த ‘திரித்துவம்’ என்ற கட்டுரை என்னுடைய அநேக கேள்விகளுக்கு பதிலாக இருந்தது. இந்த கட்டுரையை வாசித்தபின்பு திரித்துவத்தைப் பற்றி தெளிவு பெற்றுள்ளேன். இதைத் தொகுத்து வழங்கியமைக்கு நன்றி.

Mrs.Shanthini, Chennai.

2. Thank you verymuch for sending me Sathiyavasanam and Anuthinamum Christhuvudan Magazines regularly. We are verymuch blessed by them. Please continue to send the magazines regularly and please uphold our family in your prayers.

Mr.G.Abraham Solomon, Chennai.

3. சத்தியவசனம், அனுதினமும் கிறிஸ்துவுடன் இந்த பத்திரிக்கை ஊழியங்களுக்காக அனுதினமும் ஜெபிக்கிறோம். இப்பத்திரிக்கையின் மூலமாக எழுதப்படும் செய்தி ஒவ்வொரு நாளும் எனக்காகவே எழுதப்பட்டதாகவே இருக்கிறது. தேவனோடு உள்ள உறவிலே வளரவும் நிலைத்திருக்கவும் போதித்து வழிநடத்துகிறது. சத்தியவசன ஊழியங்களுக்காகவும் ஊழியர்களுக்காகவும் தொடர்ந்து ஜெபிக்கிறோம்.

Mrs.Gnana Arasi, Chengam.

4. சத்தியவசனம் ஊழியத்தின் மூலம் தனிப்பட்ட முறையிலும் குடும்பமாகவும் ஆசீாவாதங்களைப் பெற்று வருகிறோம். அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானநூல் எங்களோடு பேசுகிறது. விசுவாச பாதையில் உந்தித் தள்ளுகிறதாய் இருக்கிறது. சத்தியவசனம் இருமாத ஏடும் அவற்றில் வருகிற செய்திகள் அனைத்தும் கிறிஸ்தவ வாழ்வில் உறுதுணை போன்று உற்சாகமூட்டுகிறது. எங்கள் வாழ்வை சீர்தூக்கிப் பார்த்து சரிசெய்து கொள்ள உதவுகிறது. மேலும் நீங்கள் அனுப்பித் தரும் விசேஷித்த புத்தகங்களும் பயனுள்ளதாய் அமைந்திருக்கிறது.

Mr.Edward Raja Manoharan , Chennai.

5. உங்கள் சத்தியவசன டிவி நிகழ்ச்சிகளை பார்த்து மகிழ்ச்சியடைகிறோம். எடிசன் ஐயா, பாகவதர் வேதநாயகம் சாஸ்திரியார், டாக்டர் புஷ்பராஜ் இரண்டு சகோதரிகள் பாடும் பாடல்கள் யாவும் மிகவும் நன்றாக உள்ளன. பத்திரிக்கையில் எழுதிவரும் சகோதரி சாந்திபொன்னு, சகோ.வசந்தகுமார், Dr.உட்ரோ குரோல் இவர்களது ஆழமான சத்தியங்களை வாசித்து பயனடைகிறோம். எடிசன் ஐயா இவர்களது செய்திகளில் ‘பாவம் தொடர் பிடிக்கும், ஆவிக்குரிய முதிர்ச்சி, இயேசுவின் நாமம்’ ஆகிய தொடர்செய்திகள் ஒரு மனிதனை மனந்திரும்ப வைக்கிறது. சத்தியவசனம் கர்த்தரின் செய்திகளை தொடர்ந்து ஒளிபரப்பு செய்யுங்கள். ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட நிகழ்ச்சி பிரயோஜனமாக இருக்கிறது. அதற்கான எல்லாத் தேவைகளையும் கர்த்தர் அருள்செய்வாராக. நாங்களும் எங்கள் ஜெபங்களில் ஊழியங்களுக்காக ஜெபிக்கிறோம்.

Mr.J.Manoharan, Karur.

6. தமிழன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் கர்த்தருடைய செய்தி எங்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது. தொலைகாட்சி ஊழியங்களுக்காக ஜெபிக்கிறோம்.

Mrs. Celin Harris, Chennai.

சத்தியவசனம்