வாசகர்கள் பேசுகிறார்கள்

ஜனவரி-பிப்ரவரி 2015

1. ஜூலை – ஆகஸ்டு சத்தியவசன சஞ்சிகையில் சகோதரி சாந்திபொன்னு அவர்கள் எழுதிய ‘வாழ்வில் ஒளிவீசும் அன்பு’ என்ற கட்டுரை உண்மையாகவே எனக்கு மிகவும் ஆசீர்வாதமாக பயனுள்ளதாக இருந்தது. சகோதரி அவர்களுக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறேன். அநேகருக்கு இப்புத்தகத்தை அறிமுகப்படுத்துகிறேன்.

Sis.Selvakumari, Chennai.

2. ‘இயேசு உங்களை விசாரிக்கிறார்’ என்ற புத்தகம் கிடைத்தது. மிகுந்த பிரச்சனைகளின் ஊடாக கடந்துசெல்லும் நாட்களில் அனுதினமும் கிறிஸ்துவுடன் எனக்குத் தேவையான ஆலோசனைகளையும் ஆறுதலையும் தருகிறது. அதைப்போலவே சத்தியவசனமும் என் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு வழிகாட்டியாய் அமைந்துள்ளது. எல்லா ஊழியங்களுக்காகவும் ஜெபிக்கிறோம்.

Mrs.Navamalar Johnson, Tirunelveli.

3. Anuthinamum Christhuvudan, Sathiyavasanam magazines which are of great help to us. It substains us and gives us joy. I introduce it to other friends also. May God bless the Ministry abundantly.

Sis.D.Sakunthala Davamoni, Palayamkottai.

4. We continue to thank and praise God for the word being preached. It is wonderful that the Lord is using each one of you to reach out to the world at large. May the Lord bless you abundantly in reaping a rich harvest of souls.

Mr.Cecil Coilpillai , Chennai.

5. சத்தியவசன நிகழ்ச்சியினை தவறாமல் நாங்கள் குடும்பமாக ஒவ்வொரு ஞாயிற்றுகிழமைபும் பார்த்து மிகுந்த ஆசீர்வாதமடைகிறோம். மகிழ்ச்சி அடைந்து வருகிறோம். பேராசிரியர் எடிசன் ஐயா அவர்களின் தேவசெய்தியும், டாக்டர் புஷ்பராஜ், பாஸ்டர் பால்ராஜ் ஆகியோரது அருமையான பாடல்களும் எங்களை தேவனோடு மிகுந்த பக்தியும் நெருக்கமான அன்பையும் அடையும்படி செய்கிறது. கர்த்தர்தாமே யாவரையும் அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக.

Mr.J.Alfred Jonathan, Chennai.

6. Sathiyavasanam Magazine, Anuthinumum Christhuvudan monthly devotional and the book lets all add to our spiritual growth. Thank you for the same.

Dr.Sam William, Mananthavady.

7. தாங்கள் அனுப்பும் அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானநூல் அந்தந்த நாளுக்குரிய பெலனைத் தந்து விசுவாசத்தில் வளர உதவுகிறது. சத்தியவசன புத்தகமும் மிகவும் ஆசீர்வாதமாக உள்ளது. கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறோம். தியானங்களை எழுதுகிறவர்களுக்காக ஊழியங்களுக்காக ஜெபிக்கிறோம்.

Mrs.Gunaselvi Malliga, Udumalpet.

8. நவம்பர்-டிசம்பர் அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழில் டிசம்பர் 24ஆம் தேதிக்குரிய தியானம் அதிக ஆசீர்வாதமாக இருந்தது. ஆண்டவர் நம்மை சேர்த்துக்கொள்ள மாத்திரமல்ல, நமக்குரிய பலன்களையும் நாம் அனுபவிக்கும்படி அவற்றையும் சுமந்துவருவார் என்ற வார்த்தை சோர்வுற்றிருந்த எனக்குத் திடனைத் தந்தது.

Mr.Mathan Kumar, Tirunelveli.

சத்தியவசனம்