வாசகர்கள் பேசுகிறார்கள்

மார்ச்-ஏப்ரல் 2015

1. அனுதினமும் கிறிஸ்துவுடன் ஜூலை-ஆகஸ்டு தியானப்புத்தகத்தை ஒருவர் எனக்குக் கொடுத்தார். இப்புத்தகம் எனக்கு அதிக பயனுள்ளதாக இருக்கிறது. எழுப்புதலாகவும் அதிக பயனுள்ளதாகவும் இருப்பதால் என்னுடைய தியான வேளைக்கு இப்புத்தகத்தை பயன்படுத்த எண்ணி அதற்குரிய சந்தாவை அனுப்பியுள்ளேன். இச்சிறப்பான ஊழியம் வளர ஜெபிக்கிறேன்.

Mr.M.S.Asirvatham, Bangalore.

2. Greetings in Jesus Name. Please convey my gratitude to Prof. Edison for the clear messages in the TV Tamilan on Mondays 6.30 A.M which are really Sathiyavasanam only. Thank you.

Mrs.Usha Prasad , Bangalore.

3. நாங்கள் சத்தியவசன பங்காளராக இருக்கிறோம். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியைப் பார்த்து வருகிறோம். 12.1.15 அன்று ஒளிபரப்பான நிகழ்ச்சி எங்கள் இருதயத்தை ஆழமாகத் தொட்டது. சாமுவேலுக்கு வந்த ஏமாற்றங்கள் பற்றி 3 காரியங்களைச் சொன்னார்கள். எங்கள் வாழ்க்கையிலும் அவைகள் அப்படியே நடந்துள்ளது. சோர்ந்துபோன நிலையில் உங்கள் செய்தியைக் கேட்டு ஆறுதல் அடைந்தோம். மிக்க நன்றி. சத்தியவசன ஊழியங்களுக்காக தினமும் ஜெபிக்கிறோம்.

Mr.T.Selvaraj, Kangayam.

4. சத்தியவசனம் மூலம் அனுப்பப்படும் அனைத்து வெளியீடுகளையும் படித்து பயன் அடைந்து வருகிறோம். வருடந்தோறும் தாங்கள் வெளியிடும் சத்தியவசனம் காலண்டரிலுள்ள வாசகங்களையும் தினமும் படித்து வருகிறோம். சத்தியவசன ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிக்கிறோம்.

Mrs.S.Jeyalakshmi, Tuticorin.

5. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகம் தினந்தோறும் கிறிஸ்துவுடன் நடக்கவும், அநேகருக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்காகவும் அமைந்துள்ளது. பலவிதமான அனுபவங்களோடு தியானங்களை எழுதும் அனைத்து தேவமனிதர்களுக்காக ஜெபிக்கிறோம்.

Mr.S.Devadoss, Rajapalayam.

6.சத்தியவசனம் சஞ்சிகை, அனுதினமும் கிறிஸ்துவுடன் என்ற ஆவிக்குரிய தின தியான புத்தகங்களும் ஒழுங்காக கிடைக்கின்றன. டிவி நிகழ்ச்சிகளையும் தவறாமல் பார்த்து சந்தோஷப்பட்டு கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறோம். மிக மிக ஆழமான ஆவிக்குரிய சத்தியங்களைக் கொண்ட தங்கள் ஊழியங்களுக்காக ஜெபிக்கின்றேன்.

Mrs.D.Merin Prince, Chennai.

7. வேதாகமத்தை எத்தனையோமுறை வாசித்து முடித்துவிட்டேன். ஆனால் ஒரு வருடத்திற்குள் வாசித்து முடிக்க முடியாது. அனுதினமும் கிறிஸ்துவுடன் கால அட்டவணையைப் பின்பற்றி 2014 ஆண்டு வேதத்தை வாசித்துமுடிக்க தேவன் உதவிசெய்தார். 2015 இல் தொடர்ந்து இதையே பின்பற்றி வருகிறேன். இலங்கை சத்தியவசனத்துடன் 1970ஆம் ஆண்டு முதல் தொடர்பு இருந்தது. இத்தனை வருடகாலமாக ஆண்டவர் எங்களை அற்புதமாக, ஆச்சரியவிதமாக கண்மணிபோல பாதுகாத்து உயர்த்தி வைத்துள்ளார். ஆண்டவருக்கு கோடானகோடி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறோம்.

Mr.Joel Selvanayagam Rajan, Coimbatore.

சத்தியவசனம்