செப்டம்பர்-அக்டோபர் 2015

1. ஞாயிறுதோறும் தமிழன் டிவியில் மதியம் 12 மணிக்கு தங்கள் நிகழ்ச்சிகளை தவறாமல் பார்த்து வருகிறோம். தேவசெய்திகள் எளிமையாகவும் கருத்துள்ளதாகவும் இருப்பதால் பயனுள்ளதாக அமைந்துள்ளது. டாக்டர் புஷ்பராஜ் அவர்களின் இனிமையான பாடல்களைக் கேட்கிறோம். அவருடைய செய்திகளையும் ஒளிபரப்பு செய்யவும். கர்த்தர்தாமே தங்கள் ஊழியங்களை ஆசீர்வதிப்பாராக!

Mr.R.S.A.Sundersingh, Tirunelveli.

2. We are regularly receiving your magazine and daily readings. Praying regularly for your Ministry work.

Mrs.Elizabeth Fenn, Madurai.

3. நான் கடந்த 2006 ஆம் ஆண்டு என் கால்வலி நீங்கவும், மகள் திருமணத்திற்காகவும் ஜெபிக்கும்படி கடிதம் எழுதினேன். கர்த்தர் நம்மனைவருடைய ஜெபத்தையும் கேட்டார். அன்புமகள் திருமணம் நல்லமுறையில் நடைபெற்றது. பேரப்பிள்ளைகளையும் கர்த்தர் தந்துள்ளார். எனது கால்வலியும் குணமானது. நான் காலம் கடந்து இந்த சாட்சியை சொன்னதிற்காக மன்னிக்கவும். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

Mr.D.Rajan, Chennai.

4. சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சியைப் பார்த்தேன். சத்தியவசன ஊழியர்கள் கொடுக்கும் எல்லா செய்திகளும் என் இதயத்திற்கு ஏற்ற செய்தியாக மிகவும் எளிய உரைநடைமுறையில் கேட்பதற்கு மிகவும் தெளிவாக புரிந்துகொள்ளும் வகையில் இருக்கிறது. சுவி.சுசி பிரபாகரதாஸ் அவர்கள் தாவீது ராஜாவையும், சவுல் ராஜாவையும் பற்றி மிகவும் தெளிவாக சொன்ன செய்தியின் வாயிலாக சொன்ன சத்தியம் எனக்கு மிகவும் பிடித்தது. உங்கள் செய்தியை கேட்பது மிகவும் அருமையாக உள்ளது.

Mr.R.Samuel, Vellore.

5. Warm Greetings to you in His Name. I Praise God for your publications Sathiyavsanam monthly Magazine and the daily devotional book Anuthinamum christhuvudan. Both of them are really blessed and doctrinally sound publications. May the Lord bless these publications for the edification of the belivers spiritually.

Rev.T.Samuel, Udangudi.

6. சத்தியவசனம் மாத பத்திரிக்கை எனது கிறிஸ்தவ வாழ்க்கைக்கு ஊன்றுகோலாய் உதவுகிறது. முதிர்வயது காரணமாக பெலனையும், சத்துவத்தையும் இழந்தாலும் ஆத்துமா இரட்டிப்பாய் பெலன்கொள்ள விசுவாசத்தில் வளர உதவி செய்கிறது. Dr.தியோடர் எச்.எப் அவர்கள் எழுதிய ஆவிக்குரிய போராட்டம் என்ற செய்தியில் நமது ஆவிக்குரிய சத்துருக்களை … சிறை பிடிப்பது மட்டுமல்ல, அவைகளை உயிரோடு விட்டுவிடாமல் சங்கரித்துப் போடவேண்டும் என்ற உண்மை எனக்குள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. விட்டுவிட்ட சில பாவங்கள் ஓரங்கட்டப்படுமானால் அவை மீண்டும் நம்மை ஆக்கிரமித்துக்கொள்ளும். சிலுவையின் முத்திரையோடு அவைகளை உயிரற்றதாக்கும்போது மட்டுமே நாம் மீண்டும் அத்தகைய பாவங்களில் சிக்கிக்கொள்ள வழியிருப்பதில்லை என்பதை அற்புதமாக விளக்கியுள்ளார். அண்ணன் சுசி பிரபாகரதாஸ் அவர்களின் செய்தி நாம் கவனமாக இருக்கவேண்டியவைப் பற்றி எச்சரிக்கை செய்கிறது. பாடுகளில் கிறிஸ்துவோடு நிலைத்திருப்பதை Dr.உட்ரோ குரோல் அவர்கள் எனக்காகவே எழுதியிருப்பதைப் போலவே உணர்ந்தேன். எம்.எஸ்.வசந்தகுமார், சகோதரி சாந்திபொன்னு, சகோதரி வனஜாராஜ்குமார் ஆகியோரின் வல்லமையான செய்திகளுக்கும் நன்றிசொல்கிறேன்.

Mrs.Navamalar Johnson, Tirunelveli.