வாசகர்கள் பேசுகிறார்கள்

மே-ஜுன் 2016

1. தாங்கள் அனுப்பும் அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்தியவசன சஞ்சிகை தவறாமல் கிடைக்கப் பெறுகின்றன. வாசித்து மகிழ்ச்சி அடைகிறேன். அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்தில் ஒவ்வொரு நாளின் தியானங்களும் மிகவும் கருத்து நிறைந்ததாகவும், ஆறுதலாகவும் தேவனோடு நடப்பதற்கு உறுதுணையாகவும் உள்ளன. விசேஷமாக சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதும் அநேக தியானங்கள் மனதைத் தொடுகின்றன. ஒருமுறை அவர்கள் எழுதிய ‘அக்கினி சோதனை’ என்ற தியானத்தின் கடைசிபகுதியில் ‘தாங்கிக் கொள்ளமுடியாத அக்கினிச் சோதனையை அனுமதிக்க தேவன் பொல்லாதவர் அல்ல…, நித்தியத்தை அடைய நம்மை தகுதிப்படுத்தும் பரமதகப்பன் நம்மைக் கைவிடுவாரா?’ எனக் குறிப்பிட்டது மிகுந்த ஆறுதலை அளித்தது. சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சியில் பாடப்படும் பாடல்களைப் பாடுகிறவர்கள் அனைவரும் தெளிவாகவும் உருக்கத்துடனும் அமைதியான சூழ்நிலையில் பாடுகிறார்கள். அனுபவமுள்ள செய்தியாளர்களால் கொடுக்கப்படும் செய்திகள் ஆறதலையும் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தருகின்றன.

Mrs.Shiela Samuel, Chennai.

2. நான் அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களேடு அன்றாட வேதவாசிப்பை 2015 ஆம் ஆண்டில் வாசித்து முடித்துள்ளேன். ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மிகவும் பிரயோஜனமாக உள்ளது. நன்றி.

Dr.Y.Lydia Rajasekaran, Kuzhithurai.

3. சத்தியவசன சஞ்சிகை, அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகங்கள் தவறாமல் வருகிறது. அதை வாசித்து அநேக சத்தியங்களை புரிந்து கொண்டோம். மிகவும் ஆசீர்வாதமாக உள்ளது.

Mrs.Sundersingh, Chennai

4. தாங்கள் அனுப்பித் தந்த விருத்தாப்பியம் புத்தகம் கிடைக்கப் பெற்றேன். வயதான எனக்கு அது மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. தங்கள் ஊழியங்கள் மேலும் சிறந்திட பல ஆன்மாக்கள் கிறிஸ்துவை அறிந்துகொள்ள ஜெபிக்கிறேன்.

Mrs.Victoria Vimaladevi, Cheyyor.

5. அனுதினமும் கிறிஸ்துவுடன் ஒவ்வொரு நாளும் தவறாமல் கால அட்டவணைப்படி 2 வருட காலமாக வேதத்தை வாசித்து முடிக்க தேவன் உதவி செய்தார். காலையில் வாசித்து தேவனை நோக்கி மன்றாடுகிறேன். வேதத்தை ஆராய்கிறேன். இது என் கால்களுக்கு தீபமும், பாதைக்கு வெளிச்சமும் புத்துணர்ச்சி தருவதுமாக இருக்கிறது. ஆசீர்வாதமாக ஆச்சரியவிதமாக ஆண்டவர் என் குடும்பத்தின் பிள்ளைகளை வழிநடத்தி வருகிறார்.

Mr.Joel Selvanayagam, Coimbatore.

சத்தியவசனம்