வாசகர்கள் பேசுகிறார்கள்

ஜூலை-ஆகஸ்டு 2016

1. தங்களது பத்திரிக்கைகள் தொடர்ந்து ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பிரயோஜனமாக உள்ளது. குறிப்பாக சகோதரி சாந்திபொன்னு, சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் கடந்த மாதங்களில் அளித்த வேதவிளக்கங்கள் அதிக உன்னதமாகவும் வாழ்க்கைக்கு பிரயோஜனமாகவும் உள்ளது. அவர்களுக்கு என் அன்பு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

Mrs.Vimala Thangasamy, Tenkasi.

2. I am recipt of your Bimonthly Magazine and Anuthinamum Christhuvudan regularly. It is really helpful in doing daily.

Mr.S.D.Isaac, Arumuganeri.

3. அனுதினமும் கிறிஸ்துவுடன் தின தியானநூல் மிகவும் பயனுள்ளதாக நம்மைநாமே ஆராய்ந்துணர வைக்கக்கூடியதாக உள்ளது. சத்தியவசன ஊழியங்கள் பரலோக ராஜ்யத்துக்கு ஏராளமான ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த ஜெபிக்கிறேன். நன்றி.

Mrs.Getzie Thamburaj, Srivilliputhur.

4. வேதவினாப் போட்டி வினாக்கள் சத்தியவேதத்தை ஆழ்ந்து படிக்க ஊக்குவிக்கிறது. தங்களின் அருமையான ஊழியம் தேவமகிமைக்கேதுவாக உள்ளது. வாழ்த்துக்கள்.

Mrs.Kiruba kalavathy, Theni.

5. நீங்கள் அனுப்புகிற காலண்டர், சத்தியவசன சஞ்சிகை, அனுதினமும் கிறிஸ்துவுடன் மற்றும் அவ்வப்போது அனுப்பும் ஆவிக்குரிய புத்தகங்கள் யாவும் எங்கள் வாழ்வுக்கும் பணிக்கும் மிகவும் பயனுள்ளவையாயுள்ளன. மிக்க நன்றி. நாங்களும் எங்கள் நண்பர்களும் இவற்றால் மிகவும் பயனடைகிறோம். ஊழியங்களுக்காக ஜெபிக்கிறோம். தேவன் எங்களை தம்முடைய கிருபையினாலும் இரக்கங்களினாலும் அபரிமிதமாய் நிறைத்து வருகிறார். கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கே துதியும் கனமும் மகிமையும் செலுத்துகிறோம்.

Mr.Mrs.Vasan, Agasteeswaram.

6. தங்களின் சத்தியவசன மாதாந்திர இதழும், அனுதினமும் கிறிஸ்துவுடன் என்ற தியான புத்தகமும் என்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதற்காக ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கு நன்றி செலுத்துகிறேன்.

Mrs.Rani Venkat, Vellore.

சத்தியவசனம்