வாசகர்கள் பேசுகிறார்கள்

செப்டம்பர்-அக்டோபர் 2016

1. அனுதினமும் கிறிஸ்துவுடன் எல்லா தியானங்களும் சிறப்பாகவும் ஆசீர்வாதமாகவும் உள்ளன. தவறுகளைச் சுட்டிக்காட்டுவதிலும், விசுவாசத்தை எப்படிக் காத்துக்கொள்ள வேண்டும் என்பதை தினமும் வாசித்து பயன் அடைகிறேன். வேத வினா-விடை பதில் எழுதுவதில் ஆர்வமுள்ளவனாக இருக்கிறேன். அதன்மூலம் வேதத்தின் இரகசியங்களை அறிந்துகொள்கிறேன். அது விசுவாசத்தைப் பெலப்படுத்தவும், நல்வழிகாட்டவும், அதில் நடக்கவும் செய்கிறது. மிக்க நன்றி.

Mr.P.John Solomon, Bangalore.

2. தாங்கள் அனுப்பும் எல்லா புத்தகங்களையும் நான் பல ஆண்டுகளாக படித்து பயனடைந்து வருகிறேன். அனுதினமும் கிறிஸ்துவுடன் என்ற மாத இதழ் ஒவ்வொரு நாளும் படிக்கும்போது ஆத்துமத்திற்கு அதிக பிரயோஜனமுள்ளதாயிருக்கிறது.

Mrs.Sarojini Chandrapaul, Chennai.

3. உங்கள் யாவருக்கும் எங்கள் அன்பான வாழ்த்துக்கள். தாங்கள் அனுப்பும் அனுதினமும் கிறிஸ்துவுடன் தினசரி வேதவசனங்கள் மிகவும் அன்பானதாகவும் சோர்ந்துபோன போதெல்லாம் உயிர்ப்பிக்கின்றதாகவும் உள்ளது. எங்கள் வயோதிப காலத்தில் தைரியம் மட்டும் அல்லாமல் தேவனோடு இணைந்து வாழ உதவி செய்கிறது. மன சோர்வினால் உடல்நலம் குன்றி இருந்த என் மனைவி தற்போது நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளார். அநேகருடைய ஜெபங்கள் கேட்கப்பட்டு வருகிறது.

Mr.Richard Sam Alez, Chennai.

4. தங்கள் ஊழியங்களுக்காக தினமும் ஜெபிக்கிறோம். நீங்கள் அனுப்பிவைக்கும் புத்தகங்கள் எங்கள் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மிக பயனுள்ளதாக உள்ளது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஜெபக்குறிப்புகள் அனைத்திற்காகவும் ஜெபிக்கிறோம்.

Mrs.Beulah James, Chennai.

சத்தியவசனம்