வாசகர்கள் பேசுகிறார்கள்

நவம்பர்-டிசம்பர் 2016

1. We are receiving your Magazine regularly and the testimonies them are very impressive. We remember your Ministry in our family prayers, and request you kindly to pray for my wife children myself and all at home.

Mr&Mrs.Israel Jeyaprakash, Chennai.

2. தாங்கள் அனுப்பும் அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்தியவசன சஞ்சிகை ஆகிய புத்தகங்கள் எங்கள் ஆவிக்குரிய வாழ்விற்கு அதிக பிரயோஜனமாக இருக்கிறது. தவறாமல் படித்து ஆறுதலும் தேறுதலும் அடைகிறோம். அனுதினமும் கிறிஸ்துவுடன் நாள்தோறும் காலை மாலை வாசித்து விசுவாசத்தில் உறுதியுடன் வளர்ந்து வருகிறோம். ஆண்டவருக்கே மகிமையை செலுத்துகிறோம்.

Mr.D. Johnson , Coimbatore.

3. அன்புள்ள ஐயா, கடந்த நாட்களில் நாங்கள் சந்தித்த அநேக பிரச்சனைகள் மத்தியிலும் என் தேவன் எங்களை இந்த நிமிடம் வரை காத்துக் கொண்டு வருகிறார். அவரது கிருபையினால் தான் நாங்கள் நிலைநிற்கிறோம். எனது சோர்வு நேரங்களில் எல்லாம் எனக்கு ஆறுதல் தரும் புத்தகம் எதுவெனில், ‘சத்தியவசன சஞ்சிகையும்’, ‘அனுதினமும் கிறிஸ்துவுடன்’ இரு மாத இதழ்களுமே. எங்கள் குடும்பத்திற்காக ஜெபிக்கவும்.

Mrs.Rani Jeyakaran, Coimbatore.

4. கர்த்தருக்குள் அன்பான சகோதரருக்கு, நான் பிப்ரவரி மாதம் என் இரு பிள்ளைகளின் திருமணத்திற்காக ஜெபிக்கும்படி ஒரு ஜெபவிண்ணப்பம் எழுதினேன். உங்களிடமிருந்து பதில் வந்தது. அதன்படி நானும் சாட்சி எழுதுவேன் என பொருத்தனையோடு ஜெபித்து வந்தேன். கடந்த ஆகஸ்டு மாதம் 17 ஆம் தேதி என்னுடைய மூத்த மகளுக்கு சிறந்தவிதமாக திருமணம் முடிய கர்த்தர் கிருபை செய்தார். ஜெபித்த உங்களுக்கு நன்றி.

Mrs.Carline Rathinadass, Katpadi.

5. சத்தியவசன டிவி நிகழ்ச்சிகளும் செய்திகளும் எங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கிறது. அனுதினமும் கிறிஸ்துவுடன் பத்திரிக்கையின் மூலம் தேவன் எங்களோடு பேசுகிறார். எல்லா செய்திகளும் எங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கிறது. இதை மற்றவர்களுக்கும் சொல்லிவருகிறோம்.

Mr.T. Selvaraj ,Kangeyam.

6. Dear Brother in Christ, Praying for your Ministry. Sathiavasanam TV Messages, Magazines are very useful to us. My son has got 487/500 in Std X exams.Thank you for your prayers.

Dr.V.C. Simpson Ravi, Palayamkottai.

சத்தியவசனம்