ஜனவரி-பிப்ரவரி 2017

1. செப்டம்பர் அக்டோபர் மாத சத்தியவசன சஞ்சிகையில் Dr.உட்ரோ குரோல் எழுதிய தேவனுடைய மனதுருக்கம் என்ற தலைப்பில் எழுதியது எனக்கு அதிக ஆறுதலாக இருந்தது. அதேபோல 103ஆம் சங்கீதத்தின் வசனங்களை குறித்த கட்டுரையும் அதிக ஆசீர்வாதமாக இருந்தது. சகோதரி சாந்திபொன்னு எழுதும் ஒவ்வொன்றும் எனக்கு மிகவும் பிரயோஜனமாகவும் ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் அதிக பெலனாகவும் இருக்கிறது. அதோடு அனுதினமும் கிறிஸ்துவுடன் என் வாழ்வில் ஒவ்வொரு நாளும் அதை வாசிக்கும்போது அதிக ஆறுதலாக இருக்கிறது. வசனங்கள் ஒவ்வொன்றும் என்னை தாங்கி நடத்துகிறது.

Mrs.Babu, Bangalore.


2. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகத்தில் வேதபுத்தகத்தை தொடர்ச்சியாக படிப்பதற்கு நல்ல அட்டவணை கொடுத்திருக்கிறீர்கள். அநேக கருத்துக்கள் அடங்கிய செய்திகளைப் படிப்பது எங்கள் வாழ்க்கைக்கு பிரயோஜனமாக இருக்கிறது.

Mrs.Salomi, Dharapuram.


3. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானநூலை தினமும் தியானித்து வருகிறேன். எனது சிறுவயது முதல் எங்கள் குடும்ப ஜெபத்தில் அங்கம் வகித்த இத்தியான புத்தகம் என் திருமணத்திற்கு பிறகும் எங்கள் ஜெபத்தில் தியான நேரத்தில் அங்கம் வகிக்கிறது. தேவன் எங்களோடு இடைபடும் கருவியாகவே இந்த நூலை நாங்கள் கருதுகிறோம். எங்களுக்கு ஆலோசனைகளும் உதவிகளும் ஆண்டவர் இதன்மூலமாகவே தருகிறார். எங்கள் சோதனைகளில் நாங்கள் விசுவாசத்தில் பெலப்பட இந்தப் புத்தகம் மிகவும் உதவுகிறது. கடந்த மூன்று மாதங்களாக தங்களின் தியானபகுதி எங்கள் விசுவாசம் சோர்ந்துபோகாதபடி எங்களைப் பெலப்படுத்துகிறது.

Mrs.Metilda Selvarani, Chennai.


4. Dear Brother in Christ, I am blessed by your TV Programs, calendars and all your periodicals. Thank and praise God for each one of you all your efforts to spread The Gospel of Good News. Thank you for your prayers.

Mrs.Usha Prasad, Bangalore.


5. அனுதினமும் கிறிஸ்துவுடன் பத்திரிக்கை தினதியானம் எங்களது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அதிக உதவியாக உள்ளது. அக்டோபர் மாதம் Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய தியானங்கள் மிகவும் சிந்திக்கவைத்துள்ளது. மோசே அவர்கள் தன்னுடைய மாமனார் கூறிய ஆலோசனைகளை (தனது 80 வயதிற்கும்மேல்) கேட்டு நடந்தது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இன்றைய இளைஞர்களுக்கு இது ஒரு சவால்தான். இன்றைய இளைஞர்கள் மாணவர்கள் அறிவுரை, புத்திமதி, கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறார்கள். இளம் வாலிபபிள்ளைகள், சிறுபிள்ளைகள் நடந்துகொள்ளவேண்டிய ஆலோசனை, பெற்றோர்-பிள்ளைகள் உறவு நிலை குறித்து ஆலோசனை தியானங்கள் வரவேண்டும் என்று ஜெபிக்கிறோம்.

Mrs.Elizabeth Fenn, Madurai.


5. எனது மகள் பெல்ஷியாவுக்கு குழந்தைபாக்கியம் வேண்டி ஜெபிக்கக் கடிதம் எழுதியிருந்தேன். தங்கள் அனைவரின் ஊக்கமான ஜெபத்தாலும் கர்த்தரின் பெரிதான கிருபையால் மகளுக்கு அறுவைசிகிச்சை மூலம் பெண்குழந்தை பிறந்தது. ஜெபத்தைக் கேட்ட கர்த்தருக்கு கோடானு கோடி ஸ்தோத்திரம்.

Mr.Samson Jawaharpandian, Palayamkottai.