வாசகர்கள் பேசுகிறார்கள்

மே-ஜுன் 2017

1. அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்தியவசனம் இரண்டு புத்தகங்களும் எனக்கு வருகிறது. தொலைகாட்சியிலும் தங்கள் நிகழ்ச்சிகளைப் பார்த்து வருகிறேன். தங்கள் புத்தகங்களை வாசித்து அனுதினமும் புதிய அனுபவங்களைப் பெற்றுவருகிறேன்.

Mrs.D.Kamala Sargunam, Chennai.


2. I am regular reader of Anuthinamum Christhuvudan. Thank you for helping me to read the Bible 2016 with help of your time table. Last year 2015 I could not, because I was sick. But God gave me good health to read the Bible completely. Praise the Lord. May God bless your Missionary work.

Mrs.Ramani Livin, Nagercoil.


3. தமிழன் தொலைகாட்சியில் ஒவ்வொரு திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தங்களுடைய ‘சத்தியவசனம்’ நிகழ்ச்சியை கடந்த சில வருடங்களாக ஆர்வத்துடன் கவனித்து வருகிறேன். வேதாகமத்தை சரியாக புரிந்துகொள்ள எனக்கு அது மிகவும் உதவியாக இருந்து வருகிறது. தேவனுடைய நாமத்திற்கு மகிமையுண்டாவதாக.

Mr.S.Stephen Samraj, Namakkal.


4. நான் ஒரு ஓய்வுபெற்ற ஆசிரியர். அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் எங்கள் தியான நேரத்திற்கு அதிக பிரயோஜனமாயுள்ளது. இந்த லெந்து நாட்களில் சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் எழுதிய அனைத்து தியானங்களும் மிகவும் அருமை. தொடர்ந்து ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.

Mr. Selvaraj, Nazareth.


5. We praise God for your valuable ministry. Your Magazines and your devotional books are very much useful for us. we are receiving Magazine regularly. Thanking you.

Mr.Babu Pushparaj, West Bengal.


6. நீங்கள் அனுப்பும் சத்தியவசனம், அனுதினமும் கிறிஸ்துவுடன் தவறாமல் வருகிறது. மிகவும் ஆசீர்வாதமாக இருக்கிறது. எனக்கு வயது 88 ஆகிறது. உங்கள் ஊழியங்கள் இன்னும் ஆசீர்வாதமாக இருக்க அனுதினமும் ஜெபிக்கிறேன்.

Mrs.Kamalam, Coimbatore.


7. We happily acknowledge that through the Literature of our sathiyavasanam. We are growing in Christ in His image. Please continue to send the Literatures to the new address as we would be blessed through them. we are praying for the sathiyavasanam Ministry.

Mr.D.Baskar, Coimbatore.


8. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகத்தை தவறாமல் படித்து வருகிறோம். மிகவும் ஆசீர்வாதமாக இருக்கிறது. இன்னும் விசுவாச பாதையில் நிலை நிற்கவும் அதிகமாக கடவுளை கிட்டிச்சேரவும் உதவுகிறது. எங்களுக்காக ஜெபிக்க தயவாய் கேட்கிறேன்.

Mrs.M.Samuel, Nellikuppam.


9.    அனுதினமும் கிறிஸ்துவுடன் எனக்கு தவறாமல் வருகிறது. ஒவ்வொரு நாளும் தியானப்பகுதியை வாசிக்கிறேன். எனது ஆன்மீக வாழ்க்கைக்கு ஏற்ற மன்னாவாக உள்ளது.

Mr.D.Thangaraj, Avarikulam, Tnl dt.

சத்தியவசனம்