வாசகர்கள் பேசுகிறார்கள்

நவம்பர்-டிசம்பர் 2017

1. தாங்கள் அனுப்புகிற அனுதினமும் கிறிஸ்துவுடன் சத்தியவசனம் சஞ்சிகை ஆகியவற்றை தவறாமல் பெற்று வாசித்து வருகிறோம். இப்புத்தகங்கள் எங்கள் குடும்பத்திற்கு அதிக ஆசீர்வாதமாக இருக்கின்றன. தொடர்ந்து நாங்களும் எங்கள் பிள்ளைகளும் சாட்சியுள்ள குடும்பமாக இருக்க ஜெபித்துக்கொள்ளுங்கள்.

Mrs.Manoranjitham, Periyakulam.


2. Dear Brother in Christ, May Jesus’s Graceful, Just and righteous Hand bless you. Protect you and bless you in the field of harvesting souls for His Glory.

Mrs.Nithiya Kalyani, Chennai.


3. தங்களது அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானநூலை வாசித்து மிகவும் பயன்அடைந்து வருகிறோம். எனது தாயார் 87 வயதாகிறது. கர்த்தரின் கிருபையால் நல்ல சுகத்துடன் இருக்கிறார்கள். அவர்கள் தினமும் தியானநூலை படிக்கக் கேட்டு பயன்பெறுகிறார்கள். கர்த்தர்தாமே உங்களையும் ஊழியத்தில் பங்கெடுக்கும் யாவரையும் ஆசீர்வதித்திட ஜெபிக்கிறோம்.

Mrs.G.Suganthi, Bangalore.


4. சத்தியவசன ஒளிபரப்பு மிகவும் அருமை. வேதத்தின் சத்தியங்களை கலப்பில்லாமல் உள்ளது உள்ளபடி தெளிவாக எடுத்துக்கூறுகிற அருமையான தேவதாசர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Mr.V.Chithiraipandi, Tuticorin.


5. Greetings in Jesus Name. I am receiving your Magazine, Anuthinamum Christhuvudan in Tamil regularly in time. Thank you very much. It is really very useful to my spiritual life. We are daily remembering you, your loving family and also your wonderful Ministry in our prayers.

Bro.S.Mathews, Vellore.


6. சத்தியவசனம் அனுதினமும் கிறிஸ்துவுடன் பத்திரிக்கைகளை நாங்கள் தவறாமல் கிடைக்கப் பெற்று வருகிறோம். பத்திரிக்கைகள் எங்களுக்கு அதிக பயனுள்ளதாக இருக்கிறது. தியானங்கள் ஒவ்வொன்றும் எங்களை உற்சாகப்படுத்துகிறதாகவும், ஊக்கமூட்டுகிறதாயும் உள்ளது. கர்த்தருடைய வருகைமட்டும் ஊழியங்கள் நிறைவேற கர்த்தர் வழிநடத்துவாராக!

Mrs.Nalini prabakaran, Vellore.

சத்தியவசனம்