வாசகர்கள் பேசுகிறார்கள்

மே-ஜுன் 2018

[1]
அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகத்தில் பிரசுரமாகும் அட்டவணைப்படி 2017 ஆம் ஆண்டில் பரிசுத்த வேதாகமத்தை முழுவதுமாக மறுபடியும் ஒருமுறை வாசித்து முடிக்க ஆண்டவர் அருள்செய்தார் என்பதை நன்றி நிறைந்த இதயத்தோடு தெரிவிக்கிறேன். தினசரி வேதவாசிப்புப் பகுதிகளைக் கருத்துடன் வாசித்து தியானங்களையும் தியானிக்கும்போது உலகம் தரக்கூடாத ஒரு மனநிம்மதியையும், மன அமைதியையும் தைரியத்தையும் பெற்றுக்கொள்ள முடிகிறது என்பதை நான் சாட்சியாகக் கூறிக்கொள்கிறேன். சத்தியவசன ஊழியங்களையும் ஊழியர்களையும் கர்த்தர் மென்மேலும் ஆசீர்வதித்து வர்த்திக்கப்பண்ண அனுதின ஜெபங்களில் ஜெபிக்கிறேன். 80 வயதாகும் எனக்காகவும் ஜெபிக்க கேட்கிறேன்.

Mrs.Chandrabai Paul, Chennai.


[2]
Every morning I read “Anuthinamum Christhuvudan” along with the Holy Bible and the morning prayer helps me attain spiritual growth. Bi-monthly magazine “Sathiya Vasanam” also helps us understand Biblical truths in depth. These two books abound with deep and penetrating insights about God and the Holy Bible. I thank and praise this wonderful Ministry given by God. I regularly pray for the Ministry and all dedicated and devoted members in the Ministry.

Mr.P.Vincent, Srivilliputhur.


[3]
நீங்கள் அனுப்பும் பத்திரிக்கை தவறாமல் கிடைக்கிறது. இந்த புத்தகத்தின் மூலம் அன்றாடம் நல்ல செய்திகளை பெற்றுக்கொள்வதோடு இன்னும் அதிகமாக தேவனை தேடும் ஆர்வம் உள்ளது. நான் படித்தபிறகு என்னுடன் உள்ள சகோதரிகளுக்கும் படிக்கக் கொடுக்கிறேன். அவர்களும் படித்து பயன்பெறுகிறார்கள். தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

Mrs.Radha, Trichy.


[4]
கர்த்தரின் பெரிதான கிருபையினால் 2017 ஆம் ஆண்டு முழு வேதாகமத்தை ஓராண்டிற்குள் வாசித்து முடிக்க கிருபை புரிந்த தேவனுக்கு ஸ்தோத்திரம். எத்தனையோ தடவை எடுத்த முயற்சிகள் கைவிட்டுவிட்டது. கடந்த ஆண்டு வாசித்து முடிக்க கர்த்தர் கிருபை செய்தார். ஜெபத்துடன் வெளியிடப்பட்ட திட்டம் எனக்கு உதவியாகவும் தூண்டுகோலாகவும் இருந்தது.

Mrs.Nirmala Oliver, Chennai.

சத்தியவசனம்