வாசகர்கள் பேசுகிறார்கள்

ஜூலை-ஆகஸ்டு 2018

[1]
தாங்கள் அனுப்பித் தந்த சத்தியவசன சஞ்சிகைக்காக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். புத்தகம் வந்தவுடன் அதில் ஒரு எழுத்துவிடாமல் படித்தேன். அதில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதிய ‘பிரிக்க முடியாத இரட்டையர்கள்’ என்ற செய்தி எனக்கு மிகவும் ஆறுதலாகவும் ஆலோசனையாகவும் இருந்தது. சரீரத்தில் மிகவும் பாடுகளோடு அழுகையின் பள்ளத்தாக்கில் நடந்துகொண்டிருந்த எனக்கு இந்த சத்தியம் என்னோடு பேசுவதாக இருந்தது. பாடுகளுக்காக இனி நான் அழமாட்டேன். இதுதான் வழி என்று அறிந்தபோது மிகவும் ஆறுதலாக உள்ளது. சத்தியவசன ஊழியங்களுக்காகவும் ஊழியர்களுக்காகவும் ஜெபிக்கிறேன்.

Mrs.Sundariyammal, Madurai.


[2]
அனுதினமும் கிறிஸ்துவுடன் சத்தியவசனம் சஞ்சிகையும் தவறாமல் கிடைக்கப் பெறுகிறேன். அனுதினமும் தேவனோடு சற்றுநேரம்  தியானம் செய்ய உதவியாக இருக்கிறது. சாந்திபொன்னு அவர்களின் ஆழமான சத்தியங்கள் வாசிக்கும்போதும் மறந்துபோன அநேக ஆசீர்வாதங்கள் நினைவுக்கு வந்து தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஒவ்வொரு செய்திகளும் மனதிற்கு சமாதானமாகவும் அனுதின வாழ்க்கைக்கு பிரயோஜனமாகவும் உள்ளது. சத்தியவசன ஊழியத்திற்காக ஜெபிக்கிறேன்.

Mr.Richard Sam Alex, Chennai.


[3]
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரருக்கு, எனது இரண்டுகண்களிலும் கேட்ராக்ட் வந்து வேதாகமமோ புத்தகமோ வாசிக்கமுடியாமல் தங்களிடத்தில் ஜெபிக்கவும் தெரிவித்தேன். வயது 76 ஆகிறது. கர்த்தரின் பெரிதான கிருபையினால் கண் நரம்புகள் நன்றாக இருப்பதால் ஆபரேஷன் செய்ய முடிந்தது. இப்போது பரி. வேதாகமம் நன்றாக வாசிக்க முடிகிறது. கர்த்தருக்கே மகிமையுண்டாகட்டும்.

Mr.Goodwill Newton, Thiruvallur.

சத்தியவசனம்