நவம்பர்-டிசம்பர் 2018

[1]
தாங்கள் அனுப்பும் அனுதினமும் கிறிஸ்துவுடன் தவறாமல் கிடைக்கிறது. தினமும் வேதவழியில் பயணிக்க பிரயோஜனமுள்ள இதழாக இருக்கின்றது. அதற்காக கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறோம், தொடர்ந்து ஊழியங்களுக்காக ஜெபிக்கிறோம்.

Mr.K.Benjamin, K.K.dt.


[2]
Beloved Brother in Christ, Your Magazine, Anuthinamum Christhujvudan is very much useful for my spiritual life. It daily guides me and guards me from all evil. we are daily remembering you all and also your wonderful Ministry in our prayers.

Mr.S.Mathews, Vellore.


[3]
தாங்கள் அனுப்பும் அனுதினமும் கிறிஸ்துவுடன் தின தியான புத்தகமும் மற்ற ஆவிக்குரிய புத்தகங்களும் மிகவும் பிரயோஜனமாக உள்ளது. சத்தியவசன ஊழியம் மென்மேலும் வளர ஆண்டவர் அனுக்கிரகம் செய்ய வேண்டிக்கொள்கிறேன்.

Mrs.Padmini Victor, Madurai.


[4]
தங்களது பத்திரிக்கைகள் எங்களுக்கு கிடைக்கின்றன. அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தங்களது ஊழியப்பணிகள் மென்மேலும் வளர்ந்து சிறப்படைய எங்கள் அனுதின ஜெபத்தில் வேண்டிக்கொள்கிறோம்.

Sis.Janet George, Madurai.


[5]
நீங்கள் அனுப்பும் அன்றாட வசனம் SMS தவறாமல் வருகிறது. எனக்கு அதிக ஆசீர்வாதமாக உள்ளது.

Mr.Rajen, Madurai.


[6]
நீங்கள் whatsapp இல் அனுப்பும் செய்திகளை பெற்றுவருகிறேன். தினந்தோறும் காலையில் அந்த செய்திகளையும் ஜெபக்குறிப்புகளையும் வாசித்து அதற்காக ஜெபித்து வருகிறேன். சத்தியவசனத்தின் அனைத்து ஊழியங்களுக்காகவும் தினந்தோறும் ஜெபிக்கிறேன்.

Mr.Gnanakkan Selvaraj, Madurai.


[7]
22.10.2018 திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு தமிழன் டிவியில் சத்தியவசன நிகழ்ச்சியைப் பார்த்தோம். செய்திகள் எங்களுக்கு ஆசீர்வாதமாக உள்ளது. எனது மகள் ஆந்திராவில் மிஷனெரியாக இருக்கிறாள். சத்தியவசன ஊழியங்களுக்காகவும் ஜெபிக்கிறோம்.

Mrs.Baghavathiammal, Nagercoil.