வாசகர்கள் பேசுகிறார்கள்

மே-ஜுன் 2011

1. கர்த்தரின் பெரிதான கிருபையினாலும் உங்கள் அனைவரின் ஜெபத்தினாலும் நானும் எனது குடும்பத்தினரும் நல்ல ஆரோக்கியத்துடனும் மனநிம்மதியுடனும் உள்ளோம். தங்கள் வெளியீடுகள் மனதிற்கு புத்துணர்ச்சி தருபவையாக உள்ளன.

Mr.Sam Gunalan,  Erode

2. சத்தியவசனம் மாத இதழும், அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானநூலும் மிகவும் பிரயோஜனமாகவும் ஏற்றநேரத்தில் ஆறுதல் தரும் அரும் மருந்தாகவும் இருக்கிறது. தொடர்ந்து உங்கள் அனைவருக்காகவும் ஜெபம் செய்கிறோம்.

Mrs.Kamala Robert, Chennai.

3. We thank you very much for sending Sathiyavasanam Magazine and other Literature to us regularly.  ‘Anuthinamum Christhuvudan’  is really a source of strength to face the day. We praise God for your ministry and we pray for the same.

Mr.S.Abraham Solomon, Chennai

4. நான் சத்தியவசன விசுவாச ஜெபபங்காளராக இருப்பதில் பெருமை அடைகிறேன். உங்களுடைய அனுதினமும் கிறிஸ்துவுடன் வேததியானம் மிகவும் அருமையாக உள்ளது. ஒவ்வொரு நாளும் தேவனோடுள்ள தெய்வீக உறவை புதுப்பித்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது. விசேஷவிதமாக ‘பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்‘ என்ற புத்தகம் மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது. Dr.உட்ரோ குரோல் மற்றும் தமிழில் மொழிபெயர்த்த சகோ.வில்சன் அவர்களுக்கும் நன்றி கூறுகிறோம். இயேசுகிறிஸ்து உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக! சாத்தானின் சபைகளைப் பற்றியும், சாத்தானை ஜெயிக்கவும் சத்தியவேதத்தின் அடிப்படையில் சாத்தானின் தந்திரங்களை வெளிப்படுத்துவதில் உங்கள் புத்தகத்திற்கு இணை வேறு எந்த புத்தகமும் இல்லை. இது ஒரு உண்மை ஊழியத்தின் உறுதியான வெளிப்பாடு. இதுபோன்ற அநேக புத்தகங்கள் வெளிவர கர்த்தரின் ஆவியானவர் பெரிதும் உதவிசெய்வாராக!

Mr.J.James Jaya Prakash, Ambur.

5. ஜனவரி மாதம் திங்கள்கிழமை காலை தமிழன் டிவியில் சத்தியவசன நிகழ்ச்சியைப் பார்த்தேன். தேவமனிதர் எடிசன் ஐயா அவர்கள் தூய ஆவியின் கனிகள் பற்றி ஆற்றிய தேவசெய்திகள் மிகவும் அருமையாய் இருந்தது. அறுவைசிகிச்சை செய்து கோயம்புத்தூர் மருத்துவமனையில் இருந்தபோது டிவியில் இதைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. அந்த செய்தியை நான் மீண்டுமாக கேட்க ஆசைப்படுகிறேன். தங்கள் வெளியீடுகளை எனக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

Mr.Robert Dorairaj, Udumalpet.

6. தங்கள் டிவி நிகழ்ச்சியை கடந்த ஒரு சில மாதங்களாக நான் பார்த்து மகிழ்ச்சியடைகிறேன். பாடல்கள் செய்திகள் கருத்தாழம் கொண்டவையாக உள்ளத்தை ஈர்ப்பனவாக உள்ளன. தொடர்ந்து இவ்வூழியங்கள் நடைபெற ஜெபிக்கிறேன்.

Sis.V.Leela Baby, Chennai.

சத்தியவசனம்