மே-ஆகஸ்ட் 2021

[1]
Dear Bro. Greetings to you all. I appreciate and appeal Sathiyavasanam Ministry because it is immensely useful for my spiritual growth. Anthinamum Christhuvuden is very much useful for me which I study along with the Bible for morning devotion. Sathiyavasanam Magazine consists of spiritual articles which help me very much for my spiritual development.

Mrs.P.Vincent, Srivilliputhur.


[2]
இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். தங்கள் இருமாத வெளியீடு மிகவும் பயனுள் ளதாக இருக்கிறது. சத்தியவசன ஊழியங்களுக்காக கர்த்தரைத் துதிக்கிறேன். தங்கள் ஊழியம் மேலும் வளர்ச்சியடைய ஜெபிக்கிறேன்.

Mr.Thangaraj, Kottaram.


[3]
திங்கட்கிழமை காலை 7 மணிக்கு ஒளிபரப்பாகும் சத்தியவசன திருமறை பாட நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்து வருகிறோம். வசன ஆதாரததோடு செய்து வருகிறீர்கள். செய்திகளில் எந்த ஒரு கவர்ச்சி செழிப்பு இல்லாமல் சிறப்பாக உள்ளது. Dr.புஷ்பராஜ், Prof.எடிசன், சுவி.சுசிபிரபாகர தாஸ், சாஸ்திரியார் போன்றோர் வேதபாடங்களை கொடுத்துவருவது ஆசீர்வாதமாக உள்ளது.

Mr.J.Jesurathinam, Coimbatore.


[4]
அனுதினமும் கிறிஸ்துவுடன் மே – ஜுன் மாத புத்தகத்தை கிடைக்கப்பெற்று மகிழ்ந்தேன். படிக்கப் படிக்க சுவை கூடிக் கொண்டேயிருந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தியைச் சொல்லி அதற்கான வேதவசனத்தையும் தெரிவிப்பது மனதில் ஆழமாக பதிகிறது. உங்கள் ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.

Bro.M.Vannikalai, Chathrapatti.


[5]
சத்தியவசன வாட்ஸ் அப் செய்திகளை தினந்தோறும் உறவினர்களுக்கும் சக விசுவாசிகள், என் னிடம் படித்த மாணவர்களுக்கும் அனுப்புகிறேன். அநேகருடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு இத்தியானங்கள் அதிக பயனுள்ளதாக இருப்பதை அவர்கள் தெரிவிக்கிறார்கள். கர்த்தருக்கே மகிமையுண்டாவதாக!

Mrs.Sulochana Albert, Chennai.


[6]
சத்தியவசன வாட்ஸ் அப் செய்திகளை எனது ஆசிரியர் எனக்கு அனுப்பித் தருவார்கள். ஜூலை மாதத்தில் துன்பத்தில் துணை அவரே, அவர் என்னை கொன்று போட்டாலும் நம்புவேன் இந்த தியானங்கள் அதிக ஆறுதலாக இருந்தன. ஏனென்றால் அந்த நாளில் அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் நான் இருந்தேன். வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கத்தில் அதிக மன உளைச்சலில் இருந்தேன். இந்த தியானங்கள் மனதுக்கு ஆறுதலாக இருந்தது.

Sis.Bhavani, Chennai.


[7]
Praise the Lord, Anuthinamum Christhuvudan meditation words by Sis. Shanthiponnu is encouraging us thro small examples to our mind spirit. God bless you all.

Mrs.Kamala Robert, Coimbatore.


[8]
கடந்த 50 வருடங்களாக சத்தியவசன வானொலி செய்திகளை கேட்டும், ஆவிக்குரிய புத்தகங்களையும், அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகத்தையும் படித்துவருகிறோம். பரிசுத்த வாழ்வுக்குள் இயேசுகிறிஸ்து எங்களை வழிநடத்திக்கொண்டு வருகிறார். எல்லா கனம், மகிமையை அவருக்கு சமர்ப்பிக்கிறேன். கர்த்தர் ஊழியத்தை வர்த்திக்கப்பண்ணுவாராக.

Mr.Dhanraj, Covai.