(ஜனவரி-பிப்ரவரி 2023)
1

Dear Brother, Greetings in the Name of Lord Jesus Christ, May God Bless, Protect and guide you and those who work with you to glorify His name abundantly, May He be with you in all your under takings.

Mrs.Padmini Victor, Madurai.

2

அன்பான ஸ்தோத்திரங்கள். 46 வருடங்களாக சத்தியவசன ஊழியத்துடன் எனக்கு தொடர்பு உண்டு. இலங்கையில் மட்டும் அலுவலகம் இருந்தபோதே ஃபீபா வானொலி மூலம் நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக கேட்பேன். சில புறமதத்தினருக்கும் இவைகளை அறிமுகப்படுத்தி இரட்சிப்புக்குள்ளாக நடத்த கர்த்தர் கிருபை செய்தார். கர்த்தருடைய ஊழியர்கள் திருமதி மெடோஸ் அம்மா, வேதநாயகம் சாஸ்திரியார் அவர்களைப் போன்ற மூத்த தேவதாசர்களின் குரல்கள் இன்னமும் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. சத்தியவசன ஊழியங்களுக்காக தினமும் ஜெபிக்கிறேன்.

Mrs.Shanthi Kirubakaran, Chennai.

3

அன்பு சகோதரர்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பாக உங்கள் ரேடியோ நிகழ்ச்சிகளைக் கேட்டு வந்தோம். இப்பொழுது ஞாயிறன்று நண்பகல் 12.30 மணிக்கு நம்பிக்கை டிவியில் சத்திய வசன நிகழ்ச்சிகளைப் பார்த்து அதிக பயனடைந்துவருகிறோம். எங்களுக்கு ஆசீர்வாதமாக உள்ளது.

Ms.Prema Kumari & Ms.D.Sathya, Krishnagiri.

4

இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஸ்தோத்திரம் கூறுகிறேன். அனுதினமும் கிறிஸ்துவுடன் என்னும் தியான புத்தகத்தை தினமும் குடும்ப ஜெபத்திலும், தனிமையிலும் படித்துவருகிறோம். மிகவும் ஆசீர்வாதமாக இருக்கிறது. இந்நாட்களில் இன்னும் அதிகமாய் எங்கள் விசுவாச பாதையில் நிலைத்து நிற்க பயன்படுகிறது.

Mr.S.Dharmaraj Isaac, Arumuganeri.