• Dr.தியோடர் எச்.எஃப். •
(ஜூலை – ஆகஸ்டு 2023)

Dr.தியோடர் எச்.எஃப்.
6. திருச்சபையின் காலம் (அல்லது கிருபையின் காலம்)
(கடந்த இதழின் தொடர்ச்சி)
வெளிப்படுத்தல் 2,3இல் திருச்சபைக் காலத்தின் காலவரிசையின் வளர்ச்சி தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நாம் திருச்சபையைப் பற்றி படிக்கும்பொழுது, எந்த ஒரு குறிப்பிட்ட சபைப் பிரிவினைப் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை, ஆனால், எந்தவிதமான சபைப் பாகுபாடுமின்றி ஒழுங்காக உருவாக்கப்பட்ட பொதுவான திருச்சபையைப் பற்றியே கூறுகிறோம். இந்த பொதுவான சபையானது உண்மையான, கண்களால் காணக்கூடாத மறுபடியும் பிறந்த மக்களால் ஆன கிறிஸ்துவின் சரீரமேயாகும்.
திருச்சபையின் வரலாறு
1. எபேசு சபை அப்போஸ்தலருடைய காலத்தின் முடிவைக் குறிக்கிறது (வெளி.2:1-7).
கிறிஸ்தவத்தின் முதலாம் நூற்றாண்டில் அக்காலத்தில் அறியப்பட்டிருந்த மக்கள் இனம் அனைத்திற்கும் இரட்சிப்பின் நற்செய்தியை அறிவிப்பதில் மிகவும் உண்மையாக இருந்தது. ஆயினும் அவர்களிடமும் ஒரு குறை காணப்பட்டது. அதாவது அவர்கள் தேவன் மீது இருந்த ஆதி அன்பை விட்டுவிட்டார்கள் (வச.4). இந்த முதலாவது அன்பு என்பது, “கிறிஸ்துவோடு முழுவதுமாக அர்ப்பணிப்போடு இருத்தல்” என்று அர்த்தமாகும். கொஞ்சம் கொஞ்சமாக அந்த அன்பிற்கு பதிலாக ஊழியம் அந்த இடத்தை பிடித்துக்கொண்டது. இயேசுவோடு கூடிய நம்முடைய உறவின் மூலமாகத்தான் ஊழியம் பிறக்கவேண்டும். “நமது தன்மையிலிருந்துதான் செயல்பாடு வெளிப்படவேண்டும்” (லூயிஸ்).
இந்த சபையானது கிறிஸ்துவோடு கூடிய ஆதி அன்பிற்கும், ஐக்கியத்திற்கும் திரும்பும்படி கண்டிக்கப்படுகிறது. அவர்களது பொல்லாத வழிகளை விட்டுத்திரும்பும்படி, ஆலோசனை கூறப்பட்டது. அப்படி அவர்கள் திரும்பாவிட்டால், அவர்களது ஊழியத்தில் பரிசுத்த ஆவியின் வல்லமையை இழந்துவிடுவார்கள் என்று கூறப்பட்டது (வச.5). அவர்களது ஊழியத் திலிருந்து பரிசுத்த ஆவி நீக்கப்படுவார் என்பது, அவர்களது வாழ்க்கையிலிருந்து பரிசுத்த ஆவியானவர் நீக்கப்படுவார் என்று அர்த்தமல்ல. (அதாவது இரட்சிப்பு அவர்களைவிட்டு எடுக்கப்படாது)
2. சிமிர்னா பயங்கரமாக உபத்திரவப்படும் திருச்சபையைக் குறிக்கிறது (வெளி.2:8-11).
கி.பி.316ஆம் ஆண்டு முடிவடைந்த திருச்சபையின் இந்தக் காலம் ஏறக்குறைய 200 ஆண்டுகளைக் கடந்ததாக உள்ளது. அக்காலம் மகா உபத்திரவத்தின் காலம் என்று குறிக்கப்படுகிறது. அச்சபையின் உபத்திரவக் காலத்தில், அந்தச் சபைக்கு அதிகமான ஊக்கம் அளிக்கப்பட்டு உற்சாகப்படுத்தப்பட்டது. உபத்திரவங்கள் மத்தியில் அவர்கள் உண்மையாக இருந்தபடியினால், அவர்களுக்கு ஜீவகிரீடம் அளிக்கப்படும் என்று வாக்குப் பண்ணப்பட்டது (வச.10). இந்த ஜீவகிரீடமானது இரட்சிப்பைக் குறிக்கவில்லை, அது ஒரு பரிசாக கூறப்பட்டுள்ளது.
3. பெர்கமு, திருச்சபை ஆட்சியாளர்களின் ஏகாதி பத்திய தயவுடன் செயல்பட்ட காலத்தைக் குறிக்கிறது (வெளி.2:12-17).
இக்காலத்தில் இருந்த பெர்கமு திருச்சபை கி.பி 316ல் ஆரம்பமாகி கி.பி.500ல் முடிவடைந்தது. இக்காலத்தில் மகாசக்கரவர்த்தி கான்ஸ்டான்டைனினால் அதிகமாக ஆதரிக்கப்பட்டு, அளவிடப்பட முடியாத அளவிற்கு திருச்சபை வளர்ச்சி அடைந்தது. அக்காலத்தில் அந்த திருச்சபை கிறிஸ்துவின் நாமத்திற்கு உண்மையுள்ளதாக இருந்தது. ஆயினும் அதனுடைய பழைமை வாதம் “மரித்துப் போனது”. அதனால் அது சுவிசேஷத்தின் வல்லமையை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த சபை தீமையான செயல்பாடுகளிலிருந்தும் அவிசுவாசத்தினின்றும் விடுபடவில்லை. இந்த திருச்சபை விபசாரம் செய்வதாகக் கூறப்பட்டது. அது பாலாகின் போதனைகளைக் கைக்கொண்டு வந்தது. அதாவது, ஆவிக்கேற்றவர்கள் உலகத்தோடு சட்டத்திற்கு விரோதமான உலகக் காரியங்களில் தொடர்புடையவர்களாகக் காணப்பட்டார்கள். ஆகவேதான் ஆவிக்கேற்ற விபசாரம் செய்வதாகக் கூறப்பட்டது. அதோடுகூட, நிக்கோலாய் மதத்தினருடைய கொள்கைகளை விசுவாசிப்பதைக் குறித்தும் அதைக்குறித்து மனந்திரும்பவேண்டும் என்று கூறப்பட்டது. நிக்கொலாய் மதக் கொள்கை திருச்சபையின் அதிகாரத்தில் உள்ளவர்களின் அதிகாரத்தை அபகரித்துகொள்வதாகும், ஆகவே, அவர்கள் மனந்திரும்பி, தேவனிடத்தில் திரும்பாவிட்டால், கர்த்தர் வந்து அவருடைய வாயின் பட்டயத்தால் அவர்களோடு போராடுவேன் என்றார் (வச.16). கூறப்பட்ட அநேக காரியங்கள் நிறைவேறிவிட்டாலும் சில காரியங்கள் எதிர்காலத்தில் நிறைவேறவேண்டியுள்ளன.
4. தியத்தீரா திருச்சபை இருண்ட காலத்தைக் குறிக்கிறது (வெளி.2:18-29).
இந்தத் திருச்சபையின் காலம் கி.பி 500 முதல் கி.பி 1500 வரை தொடர்கிறது. பொல்லாப்பு என்ற புளித்தமாவினால், திருச்சபை முழுவதுமாக நிரம்பி இருந்த காலம் இது. திருச்சபையின் இந்த ஆயிர வருடக்காலத்தில், பொதுவாக கிறிஸ்தவம் முழுவதுமே ஆவிக்கேற்ற விக்கிரக ஆராதனையில் மூழ்கியது. ஆயினும் இந்தக் காலத்தில் ஒரு சிலர்மட்டும் கறைபடாமல் மீந்திருந்தார்கள் (வச.24). விசுவாசிக்காத இந்த திருச்சபையும், அதன் கிளைச் சபைகளும், உபத்திரவத்தில் தள்ளப்படுவார்கள்.
5. சர்தை சபை, சீர்திருத்தப்பட்ட சபையைக் குறிக்கிறது (வெளி.3:1-6).
இந்தத் திருச்சபையின் காலம் கி.பி.1500 லிருந்து இன்றைய காலம் வரைக்கும் உள்ளது. இந்தத் திருச்சபை ஆதியில் பொல்லாத கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதால், விரைவில் “எதிர்ப்பவர்கள்” (Protestant) என்ற பெயரைப் பெற்றது. ஆனால், தற்காலத்தில் எதிர்ப்பவர்கள் என்ற அர்த்தம் மறைந்துபோய்விட்டது.
இக்காலத்தில் சபை ஜோடிக்கப்பட்டதாக உள்ளது (மத்.12:44). ஆனால் உட்புறம் காலியாக உள்ளது. ஒரு வீட்டை உட்புறமாக சுத்தப்படுத்தி, வெறுமையாக விட்டுவிட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளை மத்தேயு 2: 43-45இல் விளக்கப்பட்டுள்ளது. இப்படியாக சர்தை சபை வெளிப்புறமாக அலங்கரிக்கப்பட்டு உட்புறமாக எந்தவிதமான கிரியைகளில்லாமல் இருக்கும் சபையைக் குறிக்கிறது. தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலர் சர்தை சபையில் இருந்தனர். அவர்கள் வெண்வஸ்திரம் தரித்து என்னோடே கூட நடப்பார்கள் என்று வெளி.3:4 கூறுகிறது.
6. பிலதெல்பியா சபை உண்மையான அருட்பணி பாரம் கொண்ட சபையாக உள்ளது (வெளி.3:7-13).
இந்தக் கடைசிகாலத்தில் உள்ள திருச்சபையை இது குறிக்கிறது. அது எண்ணிக்கையில் பெரிதாக இல்லாவிட்டாலும், பல்வேறு இயக்கங்களை உடையதாக இல்லாவிட்டாலும் தேவன் அந்த சபையோடு இருந்தார். அந்த திருச்சபை மகா உபத்திரவ காலத்திற்குட்படாது என்று வாக்குத்தத்தத்தைப் பெற்றுள்ளது. ஏனெனில் அது உபத்திரகாலத்திற்கு முன்பே, இரகசிய வருகையில் (Rapture) எடுத்துக்கொள்ளப்படும் (வச.10).
7. லவோதிக்கேயா சபை விசுவாச துரோகமுள்ள சபையாக இருக்கும் (வெளி.3:14-19).
இந்த சபை உலகக்காரியங்களில் மூழ்கி, உலக ஐசுவரியத்தையே சார்ந்திருக்கும், அது தன்னில் தானே திருப்தியுள்ளதாக இருந்து, அதற்கு எந்தவொரு தேவையும் இல்லை என்ற சுயதிருப்தியில் இருக்கும், ஆகவே தேவன், அச்சபையை அவரது வாயிலிருந்து மிகுந்த உபத்திரவ காலத்திற்குள் துப்பிப்போடுவார் (வச.16). அது பெயரளவில் சபையாக இருக்கும், ஆனால் உண்மையில், சொந்தமாக ஆத்துமாக்கள் எதையும் தேவனுக்கென்று ஆதாயப்படுத்தாத சபையாக இருக்கும், திருச்சபையின் காலம் முடிவுபெறும்பொழுது, கிறிஸ்து அநேக திருச்சபைகளின் கதவுகளுக்கு வெளியே நின்று, தட்டி, உள்ளே பிரவேசிக்க நினைப்பார். தேவனின் இறுதி விண்ணப்பம் மிகவும் தனிப்பட்டது (3:20).
திருச்சபையின் இறுதிக்காலம்
கிறிஸ்துவின் இரண்டாம் வருகை:
1. கிறிஸ்துவின் இரண்டாம் வருகை உலகில் அவரது மூன்று வகையான ஊழியத்தின் முடிவாக இருக்கிறது.
a) அவரது முதல் வருகையில் அவரது மரணத்தின் மூலமாக மனித சமுதாயத்திற்கு இரட்சிப்பைக் கொடுக்க மிகவும் தாழ்மை கோலத்தில் வந்தார். அவரது பிறப்பில், பரலோகத்திலிருந்து வந்த ஒரு தூதன் இதை அறிவித்தான் (மத்.1:20-21). இந்த இரட்சிப்பை ஒவ்வொருவரும் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
b) அவர் இப்பொழுது, தேவனால் பிறந்த ஒவ்வொரு மனிதருக்குள்ளும் வாசம் பண்ணுகிறார். அதன் மூலமாக பாவத்தை மேற்கொண்டு, தேவனுக்கு பயந்த வாழ்க்கை வாழ ஒவ்வொருவருக்கும் வல்லமை கொடுக்கிறார். இதோ, அவர் உயிரோடு இருக்கிறார் என்ற செய்தி பரலோக தூதர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது (லூக்.24:4-6). அவரது ஊழியத்தைப் பற்றி எபி.7:25 விவரிக்கிறது.
c) தேவன்தாமே அவரது பரலோக இராஜ்ஜி யத்தை பூமியிலே நிறுவுவதற்கு மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் திரும்பவருவார். அவரோடு கூட அவரால் மீட்கப்பட்ட பரிசுத்தவான்களோடும், இஸ்ரவேலோடும் திரும்பவருவார். இதுவொரு பரலோக தூதன் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது (அப்.1:11). அவர் இரண்டாவது முறை வருவதும் பரலோக தூதர்கள் மூலம் அறிவிக்கப்படும் (1தெச. 4:16). கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மிகவும் முக்கியமானது. ஏனெனில் வேதாகமத்தில் உள்ள வசனங்களில் 4 பங்கு அதைப்பற்றித்தான் கூறுகிறது. அவரது முதல் வருகையைவிட, இரண்டாவது வருகை பற்றி இருபது முறை அதிகமாகக் கூறப்பட்டுள்ளது. அவரது முதல்வருகையில் அவர் உதாசீனப்படுத்தப்பட்டு, துன்பங்களை அனுபவித்தார். ஆனால், அவரது இரண்டாவது வருகை வல்லமையும் மகிமையும் நிறைந்ததாக இருக்கும்.
2. அவரது இரண்டாம் வருகை, மூன்று வகை காரணங்களைக் கொண்டது.
a) மகா பயங்கரமான உபத்திரவ காலம் வரும் முன்பதாக, திருச்சபையை இரகசியமாக எடுத்துக்கொள்ள ஆகாயத்தில் வருவார். ஏனெனில் திருச்சபையானது அவரது நித்திய மணவாட்டியாக இருப்பதற்காக அதை தம்மிடம் எடுத்துக்கொள்வார்.
b) உபத்திரவ காலத்திற்குபின் மறுபடியும் அவர் வந்து, இஸ்ரவேலை ஒரு தேசமாக கூட்டிச்சேர்க்கவும், அதை சமாதானத்தோடும், வல்லமையோடும் நிலை நாட்ட வருவார்.
c) கிறிஸ்து இப்பூமிக்கு திரும்ப வரும்பொழுது, இப்பொழுதுள்ள அரசியல் முறையை அழித்து விட்டு, புறஜாதிகளை நியாயந்தீர்க்க வருவார் (மத். 25:31-46). பின்பு, தாவீதின் சிங்காசனத்தை மறுபடியும் ஸ்தாபித்து, இஸ்ரவேலை இப்பூமியை ஆளும் தேசமாக ஸ்தாபிப்பார். திருச்சபை அவரது ஆவிக்கேற்ற அரசாட்சியின் கீழிருக்கும். கைவிடப் பட்ட புறஜாதிகள் மத்தியிலும் அவர் ஆளுகை இருக்கும்.
3. பாவத்தின் விளைவினால் உலகம் பாதிக்கப்பட்டதாக இருக்கும்.
a) ஆயிரவருட அரசாட்சிக்கு பின்னால் வாழ்பவர்கள், கிறிஸ்து வருகைக்கு முன்னதாக உலகம் இருந்ததைவிட சீரமைக்கப்பட்டதாக இருக்கும் என்று போதிக்கிறார்கள், ஆனால், வேதாகமமும் தற்கால வேதநிபுணர்களும் அந்தக் கருத்தை ஒத்துக் கொள்வதில்லை (1 தீமோ.3:1-13 பார்க்கவும்). இதற்கு முன்னதாக இருந்த ஐந்து காலங்களும் அவபக்தியோடும், பெரிய நியாயத்தீர்ப்போடும் முடிந்தது போலவே இந்த ஆறாவது காலமும் முடியும்.
திருச்சபைக்கான இரகசிய வருகை:
i. இரகசிய வருகையின் (Rapture) அர்த்தம் மிகவும் முக்கியமானது.
a) Rapture என்ற இரகசிய வருகையில் விசுவாசிகள், திடீரென்று எடுத்துக்கொள்ளப்படுவார்கள். அதுதான் கிறிஸ்து ஆகாயத்தில் வரும்பொழுது இருக்கக்கூடிய திருச்சபையாகும் (1தெச.4:16,17; 1கொரி.15:51,52).
b) இரகசிய வருகை இரு வகைப்படும் (1தெச. 4:13-18).
1. கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களின் உயிர்த்தெழுதல், 2.விசுவாசிகளின் மறுரூபமாகுதல்.
ii. அவருடைய இரகசிய வருகை உலகிற்கு ஆச்சரியமாக இருக்கும். தேவனுடைய பிள்ளைகள் இருளின் பிள்ளைகள் அல்ல. ஆகவே அவர்களுக்கு அது ஆச்சரியமாக இருக்காது (மத்.24: 42-45; 1தெச.5: 1-6).
iii. இரகசிய வருகை மரித்திருந்தாலும், உயிரோடு இருந்தாலும் கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களாக இருக்கவேண்டும். இரண்டாவது உயிர்த்தெழுதல் இரட்சிக்கப்படாதவர்களுக்குரியது. இது கிறிஸ்து வந்து ஆயிரம் வருஷ அரசாட்சி செய்த பின்தான் இருக்கும் (வெளி.20:5,6).
(தொடரும்)
மொழியாக்கம்: Mrs.Sweetleen Christopher