வாசகர்கள் பேசுகிறார்கள்

நவம்பர்-டிசம்பர் 2013

1. சத்தியவசனம் மற்றும் அனுதினமும் கிறிஸ்துவுடன் இலக்கியப்பணிகள் தொடர வாழ்த்துக்கள். சகோ.பிரேம்குமார் அவர்கள் எழுதிய மிஷனரி அருட்பணியைக் குறித்த தியானங்கள் மிஷனரிகளையும் அவர்தம் ஊழியங்கள் பாடுகள் யாவற்றையும் அறிந்துகொள்ள உதவியது. ஆயத்தத்தைக் குறித்த சகோதரி சாந்திபொன்னு அவர்களின் தியானமும் எமது அனுதின வாழ்க்கைக்கு ஆறுதலும், வழிநடத்துதலுக்கு பயனுள்ளதாகவும் இருக்கின்றது. ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.

Mr.D.Stephen Natarajan, Neyveli.

2. தங்களது செய்திகளை தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பார்த்து கேட்டு அதிக பயனடைந்து வருகிறோம். உங்கள் பணி சிறப்பாக நடக்க தொடர்ந்து ஜெபிக்கிறோம்.

Mrs.Saroja Ravibose, Covai.

3. தாங்கள் அனுப்பிய சத்தியவசன சஞ்சிகை கிடைத்தது. மிக்க நன்றி. ‘துர்உபதேசங்கள்’ என்ற தலைப்பில் Dr.புஷ்பராஜ் அவர்களின் எச்சரிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. ‘நீ விரும்பாத இடம்’ என்ற கட்டுரை எனக்காகவே எழுதப்பட்டது போல் உணர்ந்து ஆண்டவருக்கு நன்றி செலுத்தினேன். ‘இரண்டுவிதமான ஜெபம்’ என்ற சுவி.சுசி பிரபாகரதாஸ் அவர்களின் செய்தியும் சிறப்பாக உள்ளது. இச்செய்திகள் நாம் இயேசுவின் இரத்தத்தினாலான புதிய உடன்படிக் கையின் கீழ் உள்ளோம் என்பதை உணர்விக்கின்றது.

Mr.Paul Lourdhusamy, Chennai.

4. எங்களுடைய ஊழிய வாழ்க்கையிலும், குடும்ப வாழ்விலும் நீங்கள் எழுதுகின்ற மாதப் பத்திரிக்கைகள் மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது. எனது குடும்பத்திற்காகவும் ஊழியத்திற்காகவும் ஜெபித்துக்கொள்ளுங்கள்.

Mr.G.M.John Dinesh, Jharkhand.

5.தங்களுடைய தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் ஆண்டவருடைய வருகையைப் பற்றிய செய்திகளைக் கேட்டு அதிகம் பயன் அடைந்து வருகிறேன். சுவி.சுசிபிரபாகரதாஸ் அவர்கள் கொடுத்துவரும் செய்திகள் உலர்ந்துபோன வாழ்வுக்கு ஆறுதலாகவும், கவலை, பயம் இவற்றிலிருந்து மீள உதவியாகவுமிருந்தன. வசனத்தின்படி வாழ சிந்தித்து செயல்பட வழிகாட்டியாக இருப்பதற்காக நன்றி, ஜெபிக்கிறேன்.

Mr.P.Masilamani, Dindugul.

6. சத்தியவசன நிலையத்தாருக்கு ஸ்தோத்திரம். சத்தியவசனம் தொலைகாட்சி நிகழ்ச்சியைத் தவறாமல் பார்த்து வருகிறேன். நீங்கள் கொடுக்கும் சத்தியவார்த்தைகள் யாவும் உலக வாழ்க்கைக்கும், ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் மிகுந்த பிரயோஜனமாக உள்ளது. உங்கள் பத்திரிக்கைகளை எனக்கு அனுப்பி வையுங்கள்.

Mr. D.Jeyaraj, Valparai.

7. தங்களது தமிழன் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி மிக ஆசீர்வாதமாக உள்ளது. சுவி.சுசி பிரபாகரதாஸ், பாகவதர் வேதநாயகம் சாஸ்திரியார், பேராசிரியர் எடிசன், டாக்டர் புஷ்பராஜ் இவர்களது செய்திகள் பாடல்கள் என் உள்ளத்தை அதிகமாகத் தொட்டது. ஊழியங்களுக்காக தொடர்ந்து ஜெபிக்கிறோம்.

Mr.S.D. John Thangaiah, Triupur.

சத்தியவசனம்