வாசகர்கள் பேசுகிறார்கள்

ஜனவரி-பிப்ரவரி 2014

1. நான் காலை, மாலை அனுதினமும் கிறிஸ்துவுடன் அட்டவணைப்படி ஒழுங்காக வேதாகமம் வாசித்து வருகிறேன். இவ்வாண்டிலும் முழு வேதாகமத்தையும் வாசித்து முடித்துவிடுவேன். அந்தத் தியானபுத்தகத்தை வாசிப்பதினால் என் மனதிற்கு ஒருவிதமான புத்துணர்ச்சி ஏற்படுகிறது. சுறுசுறுப்பைக் கொடுக்கிறது. மனதிற்கு அதிக மகிழ்ச்சியும் உண்டாகிறது. நான் தினந்தோறும் சத்தியவசன ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.

Mrs.Sarojini Moses,Dohnavur.

2. நான் கடந்த ஆகஸ்டு மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதினேன். என் தம்பியும் ரயில்வேயில் ஒரு தேர்வு எழுதியிருந்தான். எங்கள் இருவருக்காகவும் ஜெபிக்கும்படி தங்களுக்கு கடிதம் எழுதினேன். கர்த்தர் நம்மனைவரின் ஜெபத்தையும் கேட்டு நான் முதல்தாளில் 92 மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெறவும், என் தம்பி ரயில்வே தேர்வில் பாஸாகவும் கிருபைசெய்தார். இரட்டிப்பான வெற்றியைத் தந்து என்னை சாட்சியாக நிறுத்தின தேவனுக்கு கோடானகோடி ஸ்தோத்திரம். ஜெபித்த தங்களுக்கும் நன்றி.

Ms.Chitra, Karungualam.

3. சத்தியவசனம் மற்றும் அனுதினமும் கிறிஸ்துவுடன் என்னுடைய ஆவிக்குரிய ஜீவியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தங்கள் ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.

Mrs.Joy Devapiriam, Coimbatore.

4. நான் ஓய்வு பெற்ற ஆசிரியை. எனக்கு வயது 84. நான் தினமும் காலையில் தமிழன் சேணலில் பிரசங்கம் கேட்பேன். நான் கேட்கும் பிரசங்கங்களில் ‘சத்தியவசனம்’ நிகழ்ச்சிகளில் வரும் செய்திகள் அதிகமாகப் பிடிக்கும்.

Mr.Sironmani Albert, Madurai.

5. அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்தை நான் தினமும் காலை வாசித்து ஜெபித்து என் அன்றாட வேலைகளைத் துவங்குவது வழக்கம். அநேக நாட்கள் என் மனதில் உள்ள பிரச்சனைகளுக்கு வழி சொல்வதுபோலவே அன்றைய வாசிப்பு அமைந்திருக்கும். 2013 ஆம் ஆண்டிலும் பரி.வேதாகமத்தை அட்டவணைப்படி வாசித்து முடித்துவிடுவேன். புத்தகம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

Mr.K.Rajakumaripaulraj, Madurai.

6. Dear Bro in Christ, God is using your Ministry Mightly. Through your Bimonthly Magazine and Daily devotion book `Anuthinamum Christuvudan’ too God speak with us. Praise the Lord for the Ministry you are doing for Christ. I read the article “Valibane Un Siluvai Yenge” in September October Magazine. It was so powerful and useful to me. Sister Shanthi Ponnu written it very well through the power of Holy Spirit. God my Saviour using everyone in your Ministry very well. Praise the God for this.

Mr.G.John Augustine, Dharapuram.

7. We thank God for using each one of you in a wonderful way to reach out to many needy people. Thank you for your continued prayers.

Mr.Cecil Coilpillai, Chennai.

8. அனுதினமும் கிறிஸ்துவுடன் என்ற தியான புத்தகம் காலைதோறும் ஆண்டவர் எங்களோடு பேசுவதுபோல் உள்ளது. செய்திகள் மனதிற்கு ஆறுதலையும் தருகிறது. தங்கள் ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.

Mrs.A.Mercy, Tirunelveli.

சத்தியவசனம்