ஜெபக்குறிப்பு: டிசம்பர் 18 ஞாயிறு

அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் தேவைகளோடு இருக்கிற மக்கள் இவர்கள் மத்தியில் செய்யப்படுகிற ஊழியத்தின் மூலம் கிறிஸ்து பிறப்பின் உண்மையான மகிழ்ச்சியை அவர்களும் கண்டுகொள்ளவும், அநேகர் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளவும் ஜெபிப்போம்.

யாரைத் தேடுகிறாய்?

தியானம்: டிசம்பர் 18 ஞாயிறு; வாசிப்பு: மத்தேயு 2:1-11

யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?
(மத்தேயு 2:2)

நீ என்ன தேடுகிறாய் என அம்மா கேட்டதுகூட காதில் விழாதவனாக சிறுவன் எல்லாவற்றையும் தூக்கி வீசிக்கொண்டிருந்தான். பொறுக்காத அம்மா, சொல்லு என்று அதட்டினாள். மாமா தந்த வெளிநாட்டுப் பேனாவைக் காணவில்லை என்றான். அவனை அரவணைத்த தாய், உன் மேற்சட்டைக்குள்ளே கைவைத்துப் பார் என்றாள். ஆம், அந்தப் பேனாவை அவன் ஒளித்து வைத்து விட்டு மறந்துவிட்டான். தேடுதல் என்பது மனுக்குலத்தோடு ஒட்டியிருக்கிறது எனலாம். நித்தம் நித்தம் எதையெதையோ தேடுகிறோம், எங்கேயோ வைத்து விட்டு எங்கேயோ தேடுகிறோம். இது தேவைதானா?

யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே என்று அன்று, ஞானிகளும் தேடிவந்தார்கள். பிறந்திருக்கிறவர் ராஜா என்பதனால் அவர்கள் ராஜ அரண்மனையைச் சார்ந்து தேடினது தவறில்லை. ஆனால், கிழக்கிலே நட்சத்திரத்தைக் கண்ட சாஸ்திரிகள் அதனையே தொடராமல் தேடினது ஏன்? செய்தி கேட்ட ஏரோது அவர்களை அரண்மனைக்கே அழைப்பித்துவிட்டான். ராஜாவோடு பேசிவிட்டு அரண்மனையிலிருந்து புறப்பட்டதும், கிழக்கிலே கண்ட அதே நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்கு முன்சென்றது என்று வாசிக்கிறோம். ஆம், வழிகாட்ட ஆயத்த மாயிருந்த நட்சத்திரம் அவர்களை விட்டுவிலகவில்லை. ஆனால், அவர்களோ இடையிலே தடுமாறிவிட்டார்கள், தேடினார்கள். அதனால்தான் ஏரோதுவுக்கும் செய்தி எட்டியது. மாறாக, அந்த நட்சத்திரத்தையே அவர்கள் தொடர்ந்திருக்கலாமே!

அருமையானவர்களே, இந்நாட்களில் நாம் கிறிஸ்துவை எங்கே தேடுகிறோம்? நமது கவனத்தை ஈர்த்துவிட கொண்டாட்டங்கள் வீதிகளிலே களைகட்டி நிற்கிறது; மலிவு விற்பனைகள் கண்களைக் கவருகிறது. நாம் இயேசுவை அங்கேயா தேடுகிறோம்? கிறிஸ்துவை நாம் எங்கும் தேடவேண்டிய அவசியமே இல்லை. அவர் வார்த்தையாக நம்மோடு இருக்கிறார். நமக்குள் இருக்கிறார். அந்த வார்த்தையைவிட்டு விலகும்போதுதான் நாம் தடுமாறுகிறோம். சிறியோரிடமும் சிறைப்பட்டோரிடமும் இயேசு இருக்கிறார். தள்ளுண்டவர்களிடமும் தாபரம் அற்றவர்களிடமும் இயேசு இருக்கிறார். அப்படியிருக்க நமது சிந்தனைகளோ முற்றிலும் வேறுபட்டுக்கிடக்கிறது. இந்நிலையில் கிறிஸ்து பிறப்பை நினைவு கூரும் நாம், இன்று கிறிஸ்துவை எங்கே தேடுகிறோம். யாரிடம் தேடுகிறோம்? நமக்குள் இருக்கும் கிறிஸ்துவைச் சுமந்து, புறப்பட்டுச் செல்வோமாக!

ஜெபம்: பிதாவே, தவறான தேடுகைகளை விட்டுவிட்டு, நீர் யாரைத் தேடிச்செல்கிறீரோ அவர்களை நானும் தேடிச்செல்ல நீரே என்னை நடத்தும். ஆமென்.

அன்புடையீர் வணக்கம்!

சத்தியவசன இணைய தளத்திற்கு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துதல் கூறி உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இந்த இணையதளத்தின் வாயிலாக உங்களுக்கு சேவை செய்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். சத்தியவசன ஊழியமானது வெகுஜன தொடர்பு ஊழியமாகும் தமிழில் இந்த வெப்சைட்டில் இடம் பெற்றுள்ள எமது ஊழிய ஸ்தாபனத்தைப் பற்றிய தகவல்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் பிரயோஜனமாயிருக்கும் என நம்புகிறோம். மேலும் இதில் இடம் பெற்றுள்ள ஆவிக்குரிய செய்திகள் மற்றும் தியானங்கள் நீங்கள் ஆவிக்குரிய வாழ்வில் பெலமடையவும் ஆண்டவரோடு நெருங்கி ஜீவிக்கவும் உதவியாயிருக்கும். இதன் மூலம் தாங்கள் பெற்ற ஆசீர்வாதங்களையும் உங்கள் மேலான கருத்துக்களையும் எங்களுக்குத் தெரிவியுங்கள். உங்கள் ஜெபக்குறிப்புக்களையும் ஆவிக்குரிய தேவைகளையும் எங்களிடம் தெரிவிக்கலாம். உங்களுக்காக ஜெபிக்கவும் உங்களுக்கு ஆலோசனை அளிக்கவும் ஆயத்தமாயிருக்கிறோம். இந்த வெப்சைட்டிற்கு வருகைதரும் போது நீங்கள் எங்கள் நண்பர்களாகிறீர்கள். மேலும் நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினுடனான உறவிலே நீங்கள் மகிழ்ந்திருக்கவும் அதில் நிலைத்திருக்கவும் அதற்கு நாங்கள் உதவவும் விரும்புகிறோம்.

Welcome to the www.sathiyavasanam.in

It is a pleasure to serve you. We trust that the information and available material in Tamil language will be blessing to you, your family and friends. Sathiya Vasanam Ministry is a Unit of The Good News Broadcasting Society. It is a media ministry and we seek to touch lives with the blessing of God’s Word. You will find interesting information that will enrich you spiritual walk with the Lord Jesus and you can begin a closer walk with the Lord through the study of His Word. We welcome you to respond with any need or prayer request you may have. We are available to help you as best as we can and pray for you and your needs. When you log on to our website, you become our friend and we want to do all we can to make your relationship with Jesus Christ enjoyable and fulfilling. Thank you for choosing to log on to www.sathiyavasanam.in

சத்தியவசனம்