ஜெபக்குறிப்பு: ஜனவரி 24 செவ்வாய்

அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள் (மத். 24:11) ஆண்டவரே நமக்கு எச்சரித்துச் சென்றுள்ள இவ்வார்த்தைகளைக் கவனித்து, இந்நாட்களில் கிறிஸ்தவர்கள் விழிப்போடிருந்து, வேதவசனங்களை நன்கு வாசித்து வசனத்தின்படி அளிக்கப்படும் சத்தியங்களை மாத்திரம் கேட்டு, அதன்படி நடப்பதற்குக் கருத்தாய் ஜெபிப்போம்.