ஜெப ஊழியம்

விசுவாசமும் ஜெபமும் இவ்வூழியத்தின் மூலதனமாகும். ஜெபம் இவ்வூழியத்தின் முதுகெலும்பாயிருக்கிறது. ஜெபமில்லையேல் ஜெயமில்லை!  நேயர்களும், விசவாசப்பங்காளர்களும் ஏனைய சபை விசுவாசிகளும் கடிதங்கள் வாயிலாகவும், தொலைபேசி வாயிலாகவும், மின் அஞ்சல் (e-mail) வாயிலாகவும் எமக்குத் தெரிவிக்கும் விண்ணப்பங்களுக்காக விண்ணப்பம் செய்கிறோம். எமது ஜெப ஊழியத்தை கீழ்க்கண்டவாறு செய்கிறோம்.

1. தினமும் காலையில் அலுவலக ஜெப வேளையில் குழுவாக எமது ஊழியத்திற்காகவும் மற்றவர்களுடைய தேவைகளுக்காகவும் ஊக்கமாக ஜெபிக்கிறோம்.

2. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது புதன்கிழமை மாலையில் சத்தியவசன அலுவலகத்தில் மாலை 6.15 மணிக்கு நடைபெறும் ஜெபக்கூட்டத்திலும் நேயர்களின் தேவைகளுக்காக விண்ணப்பம் பண்ணுகிறோம்.

3. ஒவ்வொரு மாதமும் நாங்கள் பெறும் ஜெப விண்ணப்பங்களை ஒருங்கிணைத்து எமது தியான நூலில் வெளியாகும் துதி ஜெப விண்ணப்பத்தில் பிரசுரிக்கிறோம். இதன்மூலம் எமது ஜெப பங்காளர்களும் இக்குறிப்புகளுக்காக அனுதினமும் எங்களோடு இணைந்து ஜெபிக்கிறார்கள்.

இவ்வாறு ஜெபத்தில் ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து நிறைவேற்றும் இவ்வூழியத்தின் மூலம் தேவன் மகத்தான காரியங்களை செய்து வருகிறார். உங்கள் ஜெபக்குறிப்புகளை கீழ்கண்ட விண்ணப்பத்தில் (in English) மூலம் எங்களுக்குத் தெரிவிக்கலாம்.

PRAYER MINISTRY

This ministry is solely dependent on faith and prayer.Prayer is the backbone of this area of ministry.Victory is possible only through prayer. Each morning we raise our supplications as a group for the prayer requests sent by our prayer and faith partners and other believers through letters, telephone calls, e-mails and verbal communication.

Once a month every second Wednesday we gather in the office at 6 pm to pray for all the prayer requests sent by those who have needs.All these requests are collated and published in the magazines so that all our prayer partners can also join us in intercession. God is performing great miracles through this ministry which gives us an opportunity to extend our hands to those who are in need.

ஜெபக்குறிப்பு விண்ணப்பம் (Prayer Request Form)

    Your Name (required)

    Your Address (required)

    Your Contact Number (required)

    Your Email (required)

    Your Message (required)