வாசகர்கள் பேசுகிறார்கள்

1 2 3 14

வாசகர்கள் பேசுகிறார்கள்

(மே – ஜுன் 2019)

[1]
2018 ஆம் வருடத்திலும் வேதவாசிப்பு அட்டவணைப்படி வேதாகமத்தை ஒரு முறை வாசித்து முடிக்க தேவன் கிருபை செய்தார். அனுதினமும் கிறிஸ்துவுடன் தினமும் வாசித்து பயனடையவும், கிறிஸ்துவுக்குள் பெலனடையவும் உதவி செய்தார். சத்தியவசன சஞ்சிகையையும் கிடைக்கிறது. அதிலுள்ள செய்திகளை வாசித்து ஆவிக்குரிய நன்மைகளை பெற்று வருகிறோம். எனது பேத்தி பத்தாம் வகுப்பு தேர்வு எழுத இருக்கிறாள். அவளுக்காக ஜெபிக்கும்படி கேட்டிருந்தேன். கர்த்தருடைய கிருபையால் எந்த சுகவீனமும் இன்றி எல்லாத் தேர்வுகளையும் நன்றாக எழுத கர்த்தர் கிருபை செய்தார். தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்.

Mrs.Leela Packianathan, Tuticorin.


[2]
தாங்கள் அனுப்பும் அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழ், சத்தியவசன சஞ்சிகை யாவும் எங்களுக்கு அதிக ஆசீர்வாதமாக இருக்கிறது. அதை தொடர்ந்து அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.

Mrs.Christober Abraham, Turticorin.


[3]
பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து நான் எழுதுகிறேன். இங்கே சனிக்கிழமை உபவாச கூடுகை, ஞாயிறு ஆராதனை நடைபெறுகிறது. தினந்தோறும் நடைபெறும் காலை தியான வேளையில் அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபகுதியே வாசிக்கப்படுகிறது. உண்மையாகவே அதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் பரிசுத்த ஆவியானவர் எங்களோடு பேசுவதுபோலவே இருக்கும். அதின் மூலம் சிலர் இரட்சிக்கப்படவும், சிலர் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ச்சியடையவும், சிலருக்கு பாவத்தை கண்டித்து உணர்த்துவது போலவுமிருக்கும். நாங்களும் தினந்தோறும் தங்கள் ஊழியங்களுக்காக எழுத்துப்பணிக்காக தவறாமல் ஜெபிக்கிறோம்.

அன்பு சகோதரர், Palayamkottai.


[4]
2018 ஆம் ஆண்டில் அனுதினமும் கிறிஸ்துவுடன் என்ற புத்தகத்தில் கொடுக்கப்பட்ட கால அட்டவணையின்படி வேதாகமத்தை ஒருமுறை வாசித்து முடிக்க ஆண்டவர் கிருபை செய்தார். அந்தவருட ஆகஸ்டு மாதத்தில் 28 ஆம் தேதி அன்று எழுதப்பட்ட தலைப்பு ‘உடைக்கப்பட ஆயத்தமா?’ இந்தத் தலைப்பின் கீழ் எழுதப்பட்ட கருத்துகள் உடைந்த உள்ளத்தோடு வாழும் அநேகருக்கு ஆறுதலைக் கொடுத்திருக்கும். எனக்கு இப்பகுதி அதிக ஆறுதலைக் கொடுத்தது. இத்தின தியானங்கள் அநேகருக்கு இவ்விதமான ஆறுதலைக் கொடுக்க ஜெபிக்கிறேன்.

Mrs.Gnanamani Epxipah, Vellelanvilai.


[5]
அன்பு சகோதரருக்கு, தாங்கள் செய்யும் பத்திரிக்கை ஊழியங்களுக்கு மிக்க நன்றி. தியானபுத்தகம் மிகவும் நன்றாக இருக்கிறது. இந்த வருடமும் வேதாகமத்தை வாசிக்க துவங்கி தொடர்ந்து வாசித்து வருகிறேன்.

Mr.Y.Rajan, Neyveli.

வாசகர்கள் பேசுகிறார்கள்

(மார்ச் – ஏப்ரல் 2019)

[1]
தாங்கள் அனுப்பும் பத்திரிக்கை தவறாமல் கிடைக்கிறது. தியானங்கள் ஆசீர் வாதமாகவும் பத்திரிக்கை மிகவும் பிரயோஜனமாகவும் உள்ளது.

Mrs.Gunaselvi Malliga, Udumalpet.


[2]
அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழ் எனக்கு வழிகாட்டியாகவும் ஆற்றி தேற்றுவதாக உள்ளது. நல்ல ஆலோசனைகளை ஏற்ற வேளையில் அதன்மூலம் பெறவும் ஆழமாக அறிந்து கொள்ளவும் உதவுகிறது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

Mrs.Rajasuganthi Issac, Chennai.


[3]
நான் புறமதத்திலிருந்து ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டுள்ளேன். தமிழன் டிவியில் தற்செயலாக சத்தியவசன நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தது. கொடுக்கப்பட்ட செய்திகளும் வசனங்களும் தெளிவாகவும் நன்றாக மனதில் பதியும்படியாகவும் எடுத்துரைத்தது அதிக பயனுள்ளதாக இருந்தது. செய்திகுறிப்புகளை எடுத்துக்கொண்டேன். தொடர்ந்து உங்கள் ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.

Mrs.Esther Panditha Ramabai, Chennai.


[4]
நான் சத்தியவசன ஊழியத்தின் பங்காளராக இருப்பது கர்த்தர் கொடுத்த பாக்கியம். அனுதினமும் கிறிஸ்துவுடன் பிரதியில் வேதத்தை ஓராண்டுக்குள் படித்து முடிக்கும் திட்டம் அருமையானது. 2018ஆம் ஆண்டு வேதத்தை வாசித்து முடிக்க கிருபை செய்த இயேசுகிறிஸ்துவுக்கு நன்றி பலி செலுத்துகிறேன். தியானங்கள் விசுவாசிகளுக்கு அனுதின மன்னாவைக் கொடுக்கிறது. கிறிஸ்துவுக்குள் நிலைத்து நிற்க பெலன் கொடுத்து வருகிறது. கர்த்தர்தாமே இந்த ஊழியங்களை ஆசீர்வதித்து அநேக ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட கிருபை செய்வாராக.

Mrs.Packiavathy Paulraj, Chennai.


[5]
Dear Brother, I am getting Anuthinamum Christhuvudan, Sathiya vasanam Sanchigai and they are of great inspiration to me. May God continue to bless your Ministry in different ways.

Mrs.Nalini Stephenson, Vellore.


[6]
அன்பு சகோதரருக்கு, தாங்கள் செய்யும் பத்திரிக்கை ஊழியங்களுக்கு மிக்க நன்றி. இரண்டு புத்தகங்களும் மிகுந்த பயனுள்ளதாய் உள்ளது.

Mr.G.Prabin, Reetapuram

வாசகர்கள் பேசுகிறார்கள்

(ஜனவரி – பிப்ரவரி 2019)

[1]
சத்தியவசன பத்திரிக்கைகள் எங்களுக்கு அதிக ஆசீர்வாதமாக இருக்கிறது. ஆழமான சத்தியங்களை வெளிப்படுத்தி நம் ஆண்டவர்மேல் இன்னமும் அன்பு, நம்பிக்கை, விசுவாசம் வைக்க ஏதுவாகி நம் விசுவாச ஓட்டத்தை பொறுமையோடு ஓட கற்றுக் கொடுக்கிறது. தேவன்தாமே அபரிமிதமாக ஊழியங்களை ஆசீர்வதிப்பாராக.

Mrs.Emy Mohandoss, Chennai.


[2]
அனுதினமும் கிறிஸ்துவுடன் கடந்த அக்டோபர் மாதத்தின் ஜெபத்தில் நிச்சயமாய் ஒருநாள் நிகழ இருக்கிற மரண வேளையை தைரியமாய் சந்திப்பதற்கு இன்று நான் வாழும்போதே அதற்கு ஆயத்தமாகவும் சாட்சியோடும் வாழ கிருபை தாரும் என்ற ஜெபம் ஆறுதலாக இருந்தது. வயோதிப காலத்திலும் தேவன் என்னோடு இருந்து குடும்பத்தை அற்புதமாய் நடத்துகிறார்.

Mr.G.Mohnaraj, K.K.Dt


[3]
Dear Brother, I am one of the Faith partner of your Ministry. The Message given in the Nambikkai Tv on Sundays are useful to me.

Mrs.N.Leela Nesabai, Neyyoor.


[4]
அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்தை வாசித்து ஆவிக்குரிய சத்தியங்களையும் ஆசீர்வாதங்களையும் பெற்று வருகிறோம். கர்த்தர் தம் ஐசுவரியத்தின்படி எல்லாத் தேவைகளையும் சந்திப்பார். இந்த மகத்துவமான ஊழியங்களுக்காக ஜெபிக்கிறோம்.

Mrs.Kamala Jeyaseelan, Tirunelveli.


[5]
இயேசுகிறிஸ்துவின் பரிசுத்த நாமத்துக்கு ஸ்தோத்திரம். அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்தின் வாயிலாகவே பரிசுத்த வேதாகமத்தை கிரமமாக, முறைப்படி படிக்க அறிந்துகொண்டேன். கிரமமாக படிக்கும்போதே ஆண்டவர் நம்மோடு பேசுவதை, தொடுவதை உலகத்திற்கும் நமக்கும் உள்ள வேறுபாட்டை காண்பிப்பதை உணர முடிகிறது. ஒவ்வொரு நாளும் வாசிக்க வேண்டிய வேதபகுதிகள் மூலமாக ஆண்டவர் பேசுவதை உணர்கிறேன். அந்தந்த வேத பகுதிகளோடு உலகில் நடைபெறும் காரியங்களை ஒப்பிட்டால் நம் மூலம் அவர் செய்ய வேண்டுவதை, நம்மை நடத்துவதை காண முடிகிறது. ஆண்டவருக்கு நன்றி கூறுகிறேன்.

Mr.Xavier, Chennai.

1 2 3 14
சத்தியவசனம்