வாசகர்கள் பேசுகிறார்கள் (ஜனவரி – பிப்ரவரி 2026)
1
சத்தியவசனம் அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகத்தை தவறாமல் கிடைக்கப்பெற்று படித்துவருகிறேன். அதில் வேதாகமம் உருவானது எப்படி? வேதாகமம் எப்படி எழுதப்பட்டது? என்று Dr.உட்ரோகுரோல் ஐயா அவர்கள் எழுதியுள்ள கட்டுரை வேதாகமம் உருவான வரலாற்றை எழுதியள்ளது சிறப்பு. களிமண், மரப்பட்டை, மிருகங்களின் தோல், கற்பாறைகளில் எழுதப்பட்டுள்ளன என்று விளக்கியுள்ளது சிறப்பு. அட்டையின் (ஜூலை-ஆகஸ்டு) கடைசி பக்கத்தில் தேவனும் அவரது பரந்த ஞானமும் என்ற தலைப்பில் பத்து அறிஞர்களின் சிந்தனைக்கான கருத்துகளும் அருமையாக இருந்தது. நான் ஓய்வுபெற்ற ஆசிரியர். எனக்காக ஜெபியுங்கள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
Mr.K.Isaac Varathan, Thiruvallur.