இலக்கியப்பணி

வானொலி ஊழியத்திற்கு அடுத்ததாக இலக்கிய பணி இவ்வூழியத்தின் முக்கிய இடத்தை பெறுகிறது. இரு மாதத்திற்கொரு முறை இரண்டு விதமான வெளியீடுகளை வெளியிடுகிறோம்.

1. சத்தியவசன சஞ்சிகை: இதில் அனுபவமிக்க வேதாகம ஆசிரியர்கள் அளிக்கும் ஆவிக்குரிய கட்டுரைகளை பிரசுரிக்கிறோம். பழைய ஏற்பாட்டு வேதபாடம், புதிய ஏற்பாட்டு வேதபாடம், வேத ஆராய்ச்சி கட்டுரைகள், மிஷனரிகளின் வாழ்க்கை அனுபவங்கள், பெண்களுக்கான சிறப்பு கட்டுரைகள், சிறுவர்சோலை. வேதாகமப் புதிர் போன்ற பல்சுவை அம்சங்கள் இச்சஞ்சிகையில் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் அநேகர் வேத சத்தியங்களைக் கற்று வருகின்றனர். இந்த இணையதளத்தில் இவ்விதழ் இடம் பெற்றுள்ளது.

2. அனுதினமும் கிறிஸ்துவுடன்: இது ஒரு தினசரி தியான புத்தகமாகும். இதில் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் பிரயோஜனமடையும்படியாக தியானங்கள் இடம்பெற்றுள்ளது. இத்தியான நூல் அநேகருடைய வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளது. இதன் மூலம் மனந்திரும்பியோர் மற்றும் தங்கள் ஆவிக்குரிய வாழ்வில் பிரயோஜனமடைந்தோர் எண்ணற்றோர். இந்த இணையதளத்தில் இவ்விதழ் இடம் பெற்றுள்ளது.

இந்த இரு இதழையும் பெற விரும்புவோர் உங்கள் முகவரியைத் தெரிவித்தால் மாதிரி பிரதிகளை அனுப்பி வைப்போம். எமது விசுவாச பங்காளர் குடும்பத்தில் இணைந்த சத்தியவசன வானொலி ஊழியத்தை தாங்கும் அன்பர்களுக்கு இரு இதழையும் அனுப்பி வைக்கிறோம்.

ஆவிக்குரிய புஸ்தகங்கள்: எமது வானொலி செய்தியாளர்கள் அளித்த வானொலி செய்திகளைத் தொகுத்து புத்தகங்களாக வெளியிட்டுள்ளோம். மேலும் Back to the Bible ஆங்கில ஊழியத்திலிருந்து வெளியிட்டுள்ள சில புத்தகங்களை தமிழில் வெளியிட்டுள்ளோம்.

காலண்டர்: ஒவ்வொரு ஆண்டும் அனுதினமும் வாசிப்பதற்கு ஏதுவாக வேதவசனங்கள் அடங்கிய பலவர்ண மாதாந்திர காலண்டர் ஒன்றை வெளியிட்டு வருகிறோம். எமது விசுவாசப் பங்காளராக இவ்வூழியத்தை தாங்குபவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் இலவசமாக அனுப்பி வைப்போம். தனிப்பட்ட விதத்திலும் காணிக்கை அனுப்பி இக்காலண்டர்களை பெற்றுக்கொள்ளலாம். விவரங்களுக்கு எங்களோடு தொடர்பு கொள்ளவும்.

Literature Ministry

1. Sathiyavasanam Periodicals: We publish two Bi-Monthly issues in Tamil. One is Anuthinamum Christhuvudan Devotional Book containing daily devotions and another one is Sathiya Vasanam Magazine containing many inspired articles. We wish to inform that we place the daily devotions and articles in Tamil for your reading in this site. Kindly browse these devotions and articles daily. We hope that you will be spiritually benefitted definitely.
1. Daily Devotion
2. Sathiyavasanam Magazine (Current Issue)

If you want to get our bi-monthly issues kindly join in our Sathiya Vasanam Faith Partner Family and Support our Ministry.  For sample magazine and Deovotion Book, kindly contact us.

Ps.:1. If you want to get Confident Living bi-monthly English magazine and Back To The Bible English literatures, kindly visit the website: www.backtothebible.in or contact: [email protected]

2.  Spiritual Books:  We compiled the radio messages and published so many spiritual books. Also we have translated  Back To The Bible English books in Tamil. For details ….

3. Calendars: We publish every year Daily scripture calendar in Tamil. Many people are benefitted daily by the Daily scripture.