ஆலோசனை கடித ஊழியம்
அநேகர் ஆவிக்குரிய ஆலோசனைகளைக் கேட்டு தங்கள் பிரச்சனைகளை எங்களிடத்தில் எழுதித் தெரிவிக்கின்றனர். அவ்வாறு எங்களோடு தொடர்பு கொண்டுத் தெரிவிக்கும் அன்பர்களின் பிரச்சனைகளுக்காக ஜெபிப்பதுடன் வேதாகமத்தின் அடிப்படையில் அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளை அளிக்கிறோம். இவ்வாறு நாங்கள் செய்யும் கடித ஊழியத்தின் மூலமாக பலர் தங்களுடைய இரகசிய பாவங்களிலிருந்து விடுபடவும், அநேக காரியங்களிலிருந்து மனமாற்றமடையவும் தாங்கள் சென்று கொண்டிருந்த தவறான பாதையிலிருந்து சரியான வழிக்கு வரவும், அநேகர் சரியான தீர்மானங்கள் எடுக்கவும், அநேகர் ஆறுதலடையவும் தேவன் கிருபை செய்துள்ளார். இதற்காக தேவனைத் துதிக்கிறோம்.
நீங்கள் தனியாக விடப்படவில்லை!
நீங்கள் தனிமையாய் சோர்ந்து போய், கஷ்டங்களினால் மேற்கொள்ளப்பட்டவர்களாய் எங்கேயும் திரும்ப முடியவில்லையே என்று நினைத்துக் கொண்டிருப்பீர்களானால், நாங்கள் உங்களுக்கு உதவிசெய்ய முடியும்.
நீங்கள் அங்கலாய்த்து நிற்கும்பொழுது உங்களுக்கு உதவிசெய்ய சத்தியவசனம் இரண்டு ஊழியங்களை நடத்தி வருகிறது. ஒன்று உங்களுக்காக ஜெபிக்க விரும்புகிறோம். இரண்டாவதாக, உங்களுக்கு வேதாகமத்தின்படி ஆலோசனை கொடுக்க விரும்புகிறோம்.
உங்களுடைய தேவையை எங்களுக்கு எழுதுவீர்களானால், உங்களுக்காகவும் உங்கள் சூழ்நிலைக்காகவும் எங்கள் அலுவலக ஊழியர்கள் ஜெபிப்பார்கள் என்று உறுதியளிக்கிறோம். உங்களுடைய குறிப்பான தேவைகளுக்கு வேதாகமத்தின்படி விடையளிக்கவும் அனுபவமுள்ள ஊழியர்கள் இருக்கிறார்கள்.
ஆகவே வேதாகமத்தைப் பற்றிய அல்லது கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வது பற்றிய அல்லது திருமண, குடும்ப சம்பந்தமான காரியங்களைப் பற்றிய கேள்விகளுக்கு விடைகள் தேவையாயிருந்தால் அல்லது உங்கள் இருதயத்தை அழுத்திக் கொண்டிருக்கும் பாரத்தைப் பகிர்ந்துகொள்ள ஒருவர் தேவையாயிருந்தால் எங்களுக்கு எழுதுங்கள். எல்லாவற்றையும் இரகசியமாக வைத்துக்கொண்டு ஜெபிப்போம். உங்களை வேதவசனத்தின் மூலம் உற்சாகப்படுத்துவோம்.
இதை இலவசமாக பாரத்தோடு செய்வதை எங்களது கடமையாகவும் ஊழியமாகவும் கருதுகிறோம்.
COUNSELLING MINISTRY
We receive numerous letters requesting spiritual counsel, suggestions and solutions for problems. We write to them and try to satisfy them with suggestions based on Bible besides praying for them. By God’s immense grace we have helped many to come out of their secret sins. Many have been transformed. Many have come to the right way of living renouncing their sinful path.Many have been guided to take the right decisions and many have been comforted. May God be glorified.
If you want to share with someone about the burdens oppressing your heart,- please do write to us. We are available for you.. We will encourage you through scriptures in regard to your problems. We will also pray for you.