வாசகர்கள் பேசுகிறார்கள் (நவம்பர் – டிசம்பர் 2024)
கிறிஸ்துவுக்குள் அன்பான ஐயா அவர்களுக்கு, சத்தியவசன மாதாந்திர பத்திரிக்கைகள் சத்தியவசன சஞ்சிகை, அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகம் தவறாமல் கிடைக்கிறது. அதிக பிரயோஜனமாகவும் தினதியானத்திற்கு உதவியாகவும் உள்ளது. தொடர்ந்து அனுப்பி வைப்பதற்கு எங்கள் நன்றிகள்.
Mrs.Jebarani George, Tirunelveli.
சத்தியவசன தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சகோ.சுசி பிரபாகரதாஸ் அவர்கள் அளித்த செய்தி பயனுள்ளதாக இருந்தது. என் தேவன் என்னோடு பேசி என் குறைபாடுகளை உணர்த்தினார். நன்றி.
Mrs.Chandraraj, Chennai.
16-09-2024 நாளின் தியானசெய்தி என் இதயத்தைத் தொட்டது. இந்த நல் வார்த்தையின்படியே எரேமி.29:11 என்னை மீட்டு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என் வாழ்வில் ஒரு புதிய துவக்கத்தைத் தந்தார். எல்லா மகிமையையும் திரியேக தேவனுக்கே செலுத்துகிறேன். ஒவ்வொரு நாளின் தியானங்களும் அனுதின வாழ்க்கைக்கு ஆசீர்வாதமாக உள்ளது.
Mrs.Vasumathi, Vellore.