வாசகர்கள் பேசுகிறார்கள் (செப்டம்பர் – அக்டோபர் 2025)

1

கடந்த மாத சத்தியவசன தியான செய்திகள் மிகவும் எளிமையாக தெளிவான செய்திகளாக இருந்தது. எங்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது. சத்திய வசன ஊழியர்களுக்கும் தியானங்களை எழுதிய Dr.உட்ரோ குரோல் அவர்களுக்கும் எங்கள் நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

Bro.Ashok kumar.

2

தங்களுடைய மாதாந்திர பத்திரிக்கையும் அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகமும் எனது மகன் பெயரில் தவறாமல் கிடைக்கிறது. ஜூலை-ஆகஸ்டு மாத தியானபுத்தகத்தைப் படித்தேன். முன்பக்க அட்டையில் சங்.93:4ஆம் வசனத்தைப் போட்டிருக்கிறீர்கள். சமுத்திரத்தின் வலுமையான அலைகளைப் பார்க்கிலும், கர்த்தர் உன்னதத்தில் வல்லமையுள்ளவர். இந்த வசனம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

Mr.K.Isaac Varathan, Thiruvallur.