சத்திய வசனம் பங்காளர் மடல்

(மே – ஜுன் 2025)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன் என்று வாக்களித்த இன்ப இயேசுவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

சத்தியவசன சஞ்சிகையின் வாயிலாக வாசகர்களையும் எமது பங்காளர்களையும் சந்திப் பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். தேவனுடைய பெரிதான கிருபையாலும் தங்களது ஜெபங் களினாலும் சத்தியவசன ஊழியத்தின் வாயிலாக அனுதினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நற்செய்தியையும் சத்தியத்தையும் அறிந்து தங்கள் வாழ்வில் ஆசீர்வாதமடைந்து வருகின்றனர்.

நாங்கள் ஏற்கனவே அறிவித்திருந்தபடி ஜூலை 15 ஆம் தேதியன்று சென்னையில் Pastors & Partners Equip Conference ஆசீர்வாதமாக நடைபெற்றது. இதில் பங்குபெற்ற பங்காளர்களுக்கு நன்றி கூறுகிறோம். இதில் உபயோகிக்கப்பட்ட கையேடு விநியோகத்திற்கு உள்ளது. தேவைபட்டோர் எழுதி இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

சத்தியவசன வெளியீடுகள் மூலமாக தேவன் ஆற்றிவரும் மகத்துவமான கிரியைகளுக்காக தேவனை ஸ்தோத்திரிக்கிறோம். இவ்விதழ் வாயிலாக தாங்கள் பெற்றுவரும் ஆசீர்வாத அனுபவங்களை எங்களுக்குத் தெரிவிக்க மறவாதீர்கள். சத்தியவசன ஊழியப்பணிகளை உதாரத்துவமான காணிக்கையினாலும் ஜெபத்தினாலும் தாங்கிவருகிற அன்பு பங்காளர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம். நீண்டநாட்கள் விசுவாசபங்காளர் சந்தாவைப் புதுப்பிக்காத பங்காளர்கள் புதுப்பித்து தொடர்ந்து இவ்வூழியத்தைத் தாங்க நினைவூட்டுகிறோம். மேலும் சத்தியவசன தொலைக்காட்சி ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து இவ்வூழியத்தைத் தாங்க அன்பாய் வேண்டுகிறோம். சத்தியவசன ஊழியப்பணிகள் வாயிலாக அநேகமாயிரம் ஜனங்கள் நற்செய்தியை அறிய வேண்டுதல் செய்யுங்கள்.

இவ்விதழில் சகோ.வில்லியம் மெக்டோனால்ட் அவர்கள் எழுதிய இரண்டாவது வருகையின் அம்சங்கள் என்ற தலைப்பிலான செய்தியும், வெளிப்படுத்தின விசேஷத்திலிருந்து Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதியுள்ள தொடர் வேதபாடமும், Dr.வாரன் வியர்ஸ்பி அவர்கள் பவுலின் மூன்று முக்கியபார்வைகள் என்ற தலைப்பில் எழுதியுள்ள செய்தியும் இடம் பெற்றுள்ளது. மேலும் கர்த்தருக்கு பிரியமானவன் விழுந்தது எவ்வாறு? என்ற தலைப்பில் சகோ.எஸ்.ஜி. நிரஞ்சன் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையும் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதியுள்ள நாம் யார் தெரியுமா? என்ற சிறப்புசெய்தியும் இடம்பெற்றுள்ளது. Dr.M.S.வசந்தகுமார் அவர்கள் பரிசுத்த வேதாகமத்தை ஆவியோடும் அறிவோடும் வாசியுங்கள் என்ற தலைப்பில் எழுதியுள்ள சிறப்பு கட்டுரையும், Dr.தியோடர் எச்.எப் அவர்கள் வழங்கிய மூன்றாம் தேவாலயம் என்ற செய்தியின் தொடர் வேதபாடமும் இடம் பெற்றுள்ளது. தங்களது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு கட்டுரைகள் ஊக்கத்தைக் கொடுக்கும் என்றே விசுவாசிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார் (மாற்கு 13:32).