சத்திய வசனம் பங்காளர் மடல்

(செப்டம்பர் – அக்டோபர் 2025)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

ஜெயங்கொடுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனியநாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

செப்டம்பர்-அக்டோபர் மாத சத்தியவசன சஞ்சிகை வெளியிட தேவன் கிருபை செய்தபடியால் கர்த்தரைத் துதிக்கிறோம். இவ்விதழில் இடம்பெற்றுள்ள ஆவிக்குரிய செய்திகளும் வேத பாடங்களும் உங்கள் ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் பிரயோஜனமாயிருக்க வேண்டுதல் செய்கிறோம். சத்தியவசன ஊழியத்தை ஊக்கமான ஜெபத்தாலும் அன்பின் காணிக்கையாலும் தாங்கிவருகிற பங்காளர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம். தாங்கள் அளித்துவரும் உதாரத்துவமான காணிக்கையினாலேயே இவ்வூழியத்தின் தேவைகள் அனைத்தையும் கர்த்தர் சந்தித்து வருகிறார். தேவனுடைய ராஜ்யம் விரிவடையும் பணியில் தொடர்ந்து இணைக்கரம் தந்து தாங்க அன்பாய் கேட்கிறோம்.

சத்தியவசன தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாரத்தில் மூன்று நாட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அநேகமாயிரமான மக்கள் இந்நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து சத்தியங்களை கேட்டு ஆவிக்குரிய வாழ்க்கையில் பயனடைந்து வருகிறார்கள். தாங்களும் குடும்பமாக நிகழ்ச்சியில் பங்கெடுங்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் நிகழ்ச்சி நிரல் உள்ளே பிரசுரிக்கப்பட்டுள்ளது. சத்தியவசன ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து ஊழியத்தைத் தாங்க தங்களை அன்பாய் அழைக்கிறோம். YouTube சேனலில் வெளிவரும் Audio version அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களையும் குடும்பமாக கேட்டு ஆசீர்வாதம் பெறுங்கள். இதற்கான Link தேவைப்படுவோர் எங்க ளுடன் தொடர்புகொள்ளவும். போராசிரியர் S.C.எடிசன் அவர்கள் எழுதிய கிறிஸ்தவ வாழ்வு ஆரம்பம் – வளர்ச்சி – முதிர்ச்சி என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளோம். இப்புத்தமானது கூடிய விரைவில் பங்காளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இவ்விதழில் தேவனுக்கு அவசரமில்லை என்ற தலைப்பில் Dr.வாரன் வியர்ஸ்பி அவர்கள் எழுதியுள்ள கட்டுரையும், சகோ.கிறிஸ்டியன் வியாஸ் அவர்கள் எழுதிய கண்ணீரும் கண்ணீர் துருத்தியும் என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையும், தாயே! உன் கண்ணீர் எங்கே? என்ற தலைப்பில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதியுள்ள கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. மேலும் சிறந்த கிறிஸ்தவனாக வாழ்வதற்கு உரிய கருத்துக்களை வலியுறுத்தி சிறந்த கிறிஸ்தவன் என்ற தலைப்பில் Bro.வில்லியம் லா அவர்கள் எழுதியுள்ளார்கள், Dr.M.S.வசந்தகுமார் அவர்கள் எழுதிய தேவவார்த்தையை உயர்வானதாக கருதுங்கள் என்ற கட்டுரையும், மூன்றாம் தேவாலயம் என்ற தலைப்பில் Dr.தியோடர் எச்.எப். அவர்களும் வெளிப்படுத்தின விசேஷத்திலிருந்து Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய தொடர் வேதபாடமும் இடம்பெற்றுள்ளது. இச்செய்திகள் தங்களது ஆவிக்குரிய வாழ்விற்கு பிரயோஜனமாயிருக்க ஜெபிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன் (2இரா. 20:5).