ஜெபக்குறிப்பு: 2023 ஜூலை 23 ஞாயிறு

கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள் (1நாளா. 29:11) உலகமெங்கும் நடைபெறும் திருச்சபை ஆராதனைகளில் சர்வவல்லமையுள்ள தேவனின் பரிசுத்த நாமம் உயர்த்தப்படவும், சபைகளுக்குள் பரிசுத்தக் குலைச்சலான காரியங்கள் காணப்படாதபடி கர்த்தருக்கு முன்பாக மனத்தாழ்மையாய் ஆராதித்து தேவனை மகிமைப்படுத்த வேண்டுதல் செய்வோம்.