ஜெபக்குறிப்பு: 2023 ஆகஸ்டு 25 வெள்ளி
என் விண்ணப்பம் உமது சந்நிதியில் வருவதாக; உமது வார்த்தையின்படி என்னை விடுவித்தருளும் (சங்.119:170) மிகுந்த கடன்பாரத்திற்குள்ளாகி சமாதானத்தை இழந்து தவிக்கும் குடும்பங்களை கர்த்தர் நினைத்தருளவும், கடனைக் கொடுத்து தீர்க்க உதவி செய்து, தேவனாகிய கர்த்தர் அவர்களது கைக்கிரியைகளையெல்லாம் ஆசீர்வதிப்பதற்கும் வேண்டுதல் செய்வோம்.