ஜெபக்குறிப்பு: 2025 ஜூலை 23 புதன்

போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடுகளுக்காகவும், அகதிகளாக வெளியே சென்றவர்கள் மற்றும் அங்கேயே தங்கியிருக்கும் குழந்தைகள் உட்பட பசிபட்டினியோடு வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுக்காகவும் ஜெபிப்போம். அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார் (சங்.46:9) என்ற வாக்குநிறைவேறவும், போர்நிறுத்தத்திற்காக உலகநாடுகள் நடத்தும் பேச்சு வார்த்தைகள் பலனளிக்கவும் பாரத்தோடு ஜெபிப்போம்.