வாசகர்கள் பேசுகிறார்கள்

ஜூலை-ஆகஸ்டு 2014

1. தாங்கள் அனுப்பும் அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்தியவசனம் ஆகிய இரு மாத இதழ்களையும் ஒழுங்காக பெற்று ஆசீர்வாதமும் ஆறுதலும் அடைகிறேன். தேவன்தாமே உங்கள் ஊழியங்களை ஆசீர்வதிப்பாராக!

Mrs.Sheila Samuel, Chennai.

2. We thank and praise God for all the blessings He has showered on our family. We are greatly blessed by your magazines and T.V. Messages.

Mrs.Mary Prince,Villupuram.

3. தாங்கள் அனுப்பிய புக் கிடைத்தது. நன்றி. சரியான நேரத்தில் அனுப்பி ‘இயேசு எங்களை விசாரிக்கிறவர்’ என்பதை உணர்ந்துகொள்ள, ஆறுதலடைய சத்தியவசனம் உதவி செய்தது. எனது கணவர் வயது 74. எங்களுக்காக ஜெபியுங்கள்.

Mrs.Leela bai, Madurai.

4. சத்தியவசனம் புத்தகம் வந்து சேர்ந்தது மிக்க மகிழ்ச்சி. ‘ஆம், இயேசு உங்களை விசாரிக்கிறார்’ என்ற புத்தகத்திற்காக நன்றி. இந்த புத்தகத்தை வாசித்தது மனதுக்கு ஆறுதல் அளிப்பதாக இருந்தது. கர்த்தர்தாமே சத்தியவசன ஊழியத்தை மென்மேலும் ஆசீர்வதிக்க தினமும் ஜெபித்து வருகிறேன்.

Mrs.Joyce Caldwell , Trichy.

5. சத்தியவசனம் சஞ்சிகை, அனுதினமும் கிறிஸ்துவுடன், தொலைகாட்சி நிகழ்ச்சிகள், சிடிக்கள் மிகவும் ஆசீர்வாதமாகவும் பிரயோஜனமாகவும் இருக்கிறது. இலவச அஞ்சல்வழி வேதபாடம் மிகுந்த நன்மை பயக்கின்றது. அநேகருக்கு சொல்வதற்கும் ஆசீர்வாதமாக உள்ளது. கர்த்தர்தாமே சத்தியவசன ஊழியத்தை இன்னும் பெருகச்செய்து ஆசீர்வதிக்க ஜெபிக்கிறேன்.

Mrs.S.Jeslin, Bangalore.

6. நீங்கள் அனுப்பித்தரும் புத்தகங்கள் யாவும் கடவுளை நெருங்கி பிடிப்பதற்கு ஏற்றவையாக உள்ளன. இந்த ஊழியம் மேன்மேலும் வளர ஆண்டவரை வேண்டுகிறேன்.

Mrs.Padmini Victor, Madurai.

7. நான் ஓய்வு பெற்ற ஆசிரியை. என் கணவரை இழந்து மனவேதனையோடிருந்த எனக்கு ‘ஆம், இயேசு உங்களை விசாரிக்கிறார்’ என்ற புத்தகம் மிகுந்த ஆறுதலைத் தந்தது. இந்த புத்தகத்தை அனுப்பியதற்காக நன்றி கூறுகிறேன். எனக்காக எழுதப்பட்ட இந்த புத்தகத்தைக் கீழே வைக்க மனமில்லாமல் உடனே வாசித்து முடித்தேன். என் ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் மிகவும் பிரயோஜனமாக இருந்தது. வாசித்துக்கொண்டிருக்கும்போதே என்னையுமறியாமல் கண்ணீர் விட்டு அழுதேன். இப்புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்காக ஜெபிக்கிறேன். கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறேன்.

Mrs.Devakaram John, Mumbai

8. சத்தியவசன சஞ்சிகையில் வெளியான சகோதரி சாந்திபொன்னு அவர்கள் எழுதிய ஆராய்ந்து பாரும் கர்த்தாவே, ஐனிக்கேயாள், தேவன் நம் ஒவ்வொருக்கும் வைத்திருக்கும் திட்டம், தேவ எச்சரிப்பு, ஆசரிப்புக்கூடாரத்தில் கிறிஸ்துவின் சாயல் இவைகளை எல்லாம் படித்தேன். எனக்கு நல்ல மனத்திருப்தியைத் தந்தது. இயேசு உங்களை விசாரிக்கிறார் என்ற புத்தகத்தையும் படித்து ஆறுதல் பெற்றோம்.

Mrs.Nesamani, Mysore.

சத்தியவசனம்