வாசகர்கள் பேசுகிறார்கள்

செப்டம்பர்-அக்டோபர் 2014

1. ஞாயிறுதோறும் தமிழன் டிவியில் சத்தியவசன நிகழ்ச்சியைப் பார்க்கிறோம். தங்களது செய்திகள் கிராமத்தில் ஊழியம் செய்கிற எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. செய்தியாளர் கள் ஒவ்வொருவரின் செய்திகளும் எங்களுக்கு ஆறுதலாக உள்ளது.

Mr.R.Anbalazhan, Vellore.

2. Greetings in His Precious Name, We thank and praise God Your Ministry and the Magazine have been source of great encouragement. May God bless you.

Sis.Selina Edwin.Coimbatore.

3. சத்தியவசனத்தின் மூலமாக நாங்கள் பெற்றுக்கொண்டிருக்கும் ஆறுதல், தெளிவு மற்றும் அந்தந்த நாளுக்குரிய போதனைகள் யாவும் மிகவும் பிரயோஜனமாக உள்ளது. சகோதரி சாந்தி பொன்னுவின் எழுத்துக்கள் சில நேரங்களில் எங்களுக்காகவே எழுதினது போல் உள்ளது. தேவன்தாமே அவர்களை ஆசீர்வதிக்க ஜெபிக்கின்றோம்.

Mr.Richard Sam Alez, Chennai.

4. நான் சத்தியவசனம் தொலைகாட்சி நிகழ்ச்சியை ஞாயிறு மதியம், திங்கட்கிழமை காலையிலும் ஆவலுடன் பார்த்து ஆவிக்குரிய சத்தியவார்த்தைகளை கேட்டு வருகிறேன். மாதாந்திர பத்திரிக்கைகள் பெறவும் ஆவிக்குரிய வாழ்வில் வளர விரும்பி பங்காளர் திட்டத்தில் இணைந்து இவ்வூழியத்தை தாங்க விரும்புகிறேன்.

Mr.Arul Jeganathan , Triupattur.

5. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகம் நாங்கள் அன்றாடம் ஆண்டவருடன் இணைந்திருக்கவும், எங்களுக்கு போஜனமாகவும் இருக்கிறது. நாங்கள் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். ஊழியங்களுக்காக ஜெபிக்கிறோம்.

Mr.C.Saleem, Ooty.

6. We are using the daily reading for a longtime. We have introduced your daily reading to our relatives. Now they too want to get one from you. . We do uphold your Ministry by our prayers. We do enjoy your T.V.Ministry and are benefitted by it.

Mrs.Nalini Ranjan, Trichy.

7. சத்தியவசன மாதாந்திர வெளியீடுகள், தொலைகாட்சி நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எனது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அதிக பிரயோஜனமாக இருக்கிறது. சுவி.சுசி பிரபாகரதாஸ், டாக்டர் புஷ்பராஜ் இவர்களது பிரசங்கங்கள், பாட்டுகள் நன்றாக இருக்கின்றன. இவ்வூழியத்தின் பங்காளராக இருந்து தாங்குவேன்.

Mrs.Chandra David, Coimbatore.

8. சகோதரி சாந்திபொன்னு அவர்கள் எழுதியிருந்த ‘வாழ்வில் ஒளிவீசும் அன்பு’ என்ற கட்டுரையில் தேவனுக்கு நன்றி சொல்லும்படி சொல்லியிருக்கிற ஆலோசனைக்காக சகோதரிக்கு நன்றி சொல்லுகிறேன். நிஜம்தான்! நம்மை காயப்படுத்துகிறவர்கள், நாம் இன்னும் இன்னும் கர்த்தரின் பாதத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும்படி செய்கிறார்கள். அவர்களுக்காக ஆண்டவருக்கு நன்றி சொல்லும்போது நமது பாரங்கள் பெரிதும் குறைந்து போகின்றன.

Mrs. Hetzi Thamburaj, Srivilluputhur.

சத்தியவசனம்