வாசகர்கள் பேசுகிறார்கள்

ஜூலை-ஆகஸ்டு 2015

1. ஜனவரி – பிப்ரவரி சத்தியவசன சஞ்சிகை கிடைத்தது. எல்லா கட்டுரைகளும் நன்றாக இருந்தது. குறிப்பாக புது தீர்மானம் எடுக்கப் பழகுவோம் என்ற கட்டுரை என்னுடைய காலத்தின் சூழ்நிலைக்கேற்றவாறு மிகவும் தேறுதலாகவும் அருமையாகவும் இருந்தது. கட்டுரை எழுதிய சகோதரிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Mr. Russal Raj, Erode.

2. The bimonthly Magazine `Sathiyavasanam’ aslo fills me with spiritual joy which I study with great favour and interest. The writers express deep and profound spiritual truths in simple language so that we can understand easily. I love and respect your Ministry and I regularly pray for the Ministry.

Mr.P.Vincent, Srivilliputhur.

3. தாங்கள் அனுப்பித் தரும் சத்தியவசன பத்திரிக்கையும், அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழும் தவறாமல் கிடைக்கின்றன. மிக்க மகிழ்ச்சி. கிறிஸ்தவ வாழ்க்கையில் அனுதினமும் இயேசுவோடு நடப்பதற்கு மிகவும் உறுதுணையாக விளங்கும் அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழுக்காக ஆண்டவருக்கு நன்றி சொல்கிறேன். அதேபோல சத்தியவசனம் இருமாத பத்திரிக்கையில் எழுதப்பட்டிருக்கும் ஒவ்வொரு கட்டுரையும் ஒரு மனிதனுக்கு தேவையான சத்தியங்களைப் போதிக்கிறது. இப்புத்தகங்கள் எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது.

Mr.G.Thilagar, Tuticorin.

5.சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சியில் அண்ணன் பிரகாஷ் ஏசுவடியான் அவர்கள் கொடுத்த ‘தேவன் அன்புள்ளவர்’ என்ற செய்தி பிரயோஜனமாக இருந்தது. அவருடைய செய்திகளை நற்செய்தி பணி முகாம்களில் பலமுறை கேட்டிருக்கிறேன். பெத்தேல் நிறுவனத்தில் எங்களோடு பணிசெய்தவர். நிகழ்ச்சியில் அவர் கொடுத்த செய்தி பொதுமக்களுக்கு ஏற்ற இரட்சிப்பின் செய்தி ஆகும்.

Mr.R.Daniel Raj, Kadayampatti.

6. அஞ்சல் வழி வேதபாடத்தில் முதல் இரண்டு பாடங்களை முடித்து வினாத்தாளை பூர்த்தி செய்து அனுப்பி வைத்துள்ளேன். அஞ்சல் வழி வேதபாடம் மிகவும் பயனுள்ளதாய் உள்ளது. ஆண்டவர் இயேசுகிறிஸ்துவைப் பற்றி நன்கு அறிந்துகொள்ள உதவியாக உள்ளது. நீங்கள் அனுப்பிய மற்ற புத்தகங்களும் கிடைத்தது. சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதிவரும் தியானங்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அனுதினமும் கிறிஸ்துவுடன் சத்தியவேதத்தை வாசிக்க மற்றும் தியானிக்க உதவியாக உள்ளது.

Sis.Selvakumari, Villupuram.

7. Greetings to you in the Matchless name of Lord Jesus Christ, Thank and praise God for your wonderful Magazine. Anuthinamum Christhuvudan which is very useful to me and for my Ministry. May God bless you. Thank you.

Eva.S.Timothy, Coimbatore.

8. சத்தியவசன ஊழியத்தின் மூலம் நாங்கள் மிகுந்த ஆசீர்வாதம் பெற்று வருகிறோம். அனுதினமும் கிறிஸ்துவுடன் மற்றும் இருமாத ஏடு என தங்களின் புத்தகங்களை மாதந்தோறும் தவறாமல் பெற்று ஆவிக்குரிய காரியங்களில் வளர்ந்து வருகின்றோம். மேலும் தங்களின் ஜெபம் மற்றும் ஆறுதலின் வார்த்தைகள் நிறைந்த கடிதத்தின் மூலம் மிகுந்த ஆறுதல் பெற்று வருகிறோம்.

Sis.Pushparani, Chenglepet.

சத்தியவசனம்